500சிசி க்கு மேற்பட்ட சூப்பர் பைக்குகளுக்கு தனி ஓட்டுநர் உரிமங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூப்பர் பைக் விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பாவில் சில நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் உள்ளன.
பல நாடுகளில் பிரத்யேக லைசன்ஸ் இல்லையென்றால் சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும் இதுபோன்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.
அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் பைக்குகளை மிக கவனமாக கையாளுவது மிக அவசியமாகும். சூப்பர் பைக்குகளில் ஆற்றல் மற்றும் செயல் திறன் மிக அதிகமாக இருக்கும் என்பதனால் இந்த நடைமுறை பல ஐரோப்பியா ஒன்றிங்களில் உள்ளது.
குறிப்பாக ஐரோப்பியா நாடுகளில் 24 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனைத்து பைக்குகளையும் ஓட்டும் உரிமத்தினை பெற இயலும். 18 வயதுக்கு மேற்பட்டோர் 46.9 ஹெச்பி ஆற்றலைவெளிப்படுத்தும் பைக்குகளுக்கு குறைவான பைக்கினை மட்டுமே இயக்க அனுமதி உள்ளது.
தற்பொழுது இந்தியாவில் இருவிதமான முறையில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றது. ஒன்று கியர்கள் அல்லாத ஸ்கூட்டர்கள் மற்றும் மொபட் பைக்குகளுக்கான உரிமம் மற்றொன்று கியர்களை கொண்டு இயங்கும் பைக்குகள் ஆகும்.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 4.89 லட்சம் விபத்துகள் நடந்துள்ளது. இவற்றில் இருசகர வாகன ஓட்டிகளின் பங்கு 27 சதவீதமாகும். எனவே 500 மற்றும் அதற்க்கு மேற்பட்ட சிசி கொண்ட பைக்குகளுக்கு புதிய ஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறை வந்தால் விபத்துகளை பெருமளவில் தடுக்க இயலும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…