செவர்லே எசென்சியா காரின் ஸ்பை படங்கள் வெளியானது

செவர்லே நிறுவனத்தின் எசென்சியா காம்பேக்ட் செடான் ரக காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. செவர்லே எசென்சியா செடான் கார் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட எசென்சியா கான்செப்ட் கார் மாடலானது பீட் காரினை அடிப்படையாக கொண்ட செடான் கார் மாடலாக வரவுள்ளது. பீட் காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் ரக பீட் ஏக்டிவ் மாடலும் 2017 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

செவர்லே எசென்சியா எஞ்சின்

ஜிஎம் நிறுவனத்தின் கொரியா டிசைன் பிரிவால் வடிவமைக்கபட்டுள்ள எசென்சியா மாடலானது கான்செப்ட் மாடலின் அடிப்பையிலே அமைந்திருக்கும். செவர்லே தாலேகான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள எசென்சியா காரில் 77 பிரேக் ஹார்ஸ்பவர் , 107 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 56 பிரேக் ஹார்ஸ்பவர் , 142.5 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு எஞ்சினிலும் 5 விதமான வேகத்தை அளிக்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் இடம்பெறலாம்.

இன்டிரியரில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , தொடுதிரை செவர்லே மைலிங்க்2 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , நேவிகேஷன் , ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களை பெற்றதாக இருக்கும்.

செவர்லே எசென்சியா காரில் அடிப்படையான பாதுகாப்பு அம்சமாக இரண்டு முன்பக்க காற்றுப்பை , ஏபிஎஸ் , ரிவிர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார் போன்றவை பெற்றிருக்கும். மிகவும் சவாலான சந்தையாக விளங்கும் காம்பேக்ட் செடான் பிரிவில் டிசையர் ,கைட் 5 , எமியோ ,எக்ஸ்சென்ட் , அமேஸ் போன்ற மாடல்களுடன் சந்தையில் போட்டியை ஏற்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டின் மத்தியில் செவர்லே எசென்சியா எதிர்பார்க்கப்படுகின்றது.

image source : carandbike

Exit mobile version