Auto News

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி டீசர்

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்டுள்ள செவர்லே விரைவில் வருவதனை உறுதுசெய்துள்ளது. வரும் ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி அக்டோபர் 21ந் தேதி விற்பனைக்கு வரலாம்.
செவர்லே ட்ரெயில்பிளேசர்

செவர்லே தனது இணையத்தில் ட்ரெயில்பிளேசர் விபரங்களை வெளியிட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் மட்டும் வரவுள்ள நிலையில் மெனுவல் டிரான்ஸ்மிஷன் தாமதமாக வரவுள்ளது.

197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  இதன் முறுக்குவிசை 500என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

7 இஞ்ச் மைலிங்க தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் தொடர்பு , ஆடியோ வீடியோ மற்றும் நேவிகேஷன் அமைப்பினை பெற இயலும். இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் மற்றும் ஹீல் அசிஸ்ட் கன்ட்ரோல் ஹீல் டீஸசன்ட் கன்ட்ரோல் ஆப்ஷன்கள் உள்ளது.

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.31லட்சத்தில் இருக்கலாம்.

Chevrolet Trailblazer SUV teased

Share
Published by
MR.Durai
Tags: ChevroletSUV