Categories: Auto News

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக் – முழுவிபரம்

வரும் 20ந் தேதி டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில் அப்பாச்சி 200 பைக்கின் படங்கள் மற்றும் நுட்ப விபரங்கள் விலை தவிர மற்ற அனைத்து விபரங்களும் வெளியாகியுள்ளது.

tvs-apache-rtr200-4v

டிவிஎஸ் ட்ராகன் கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக் மிக நேர்த்தியான ஸ்டைலுடன் இளைஞர்களுக்கு ஏற்ற மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் அப்பாச்சி பிராண்டின் வலிமையை நிரூபிக்கும் வகையில் டிவிஎஸ் உருவாக்கியுள்ளது.

 

அப்பாச்சி 200 பைக்கில் 20.23BHP ஆற்றல் மற்றும் 18.1Nm டார்க் வெளிப்படுத்தும் 197.75 ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அப்பாச்சி 200 உச்சவேகம் மணிக்கு 130 கிமீ ஆகும். பைக்கின் எடை 140கிலோ ஆகும்.

ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என இரு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரவுள்ள அப்பாச்சே 200 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோலில் ஆர்பிஎம் மீட்டர் டேக்கோ மீட்டர் , ஸ்பீடோ மீட்டர் , எரிபொருள் அளவு , கியர் பொசிசன் , கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் , ஏபிஎஸ் லைட் என பலவற்றை பெற்று விளங்குகின்றது.

கருப்பு , கிரே , மஞ்சள்  , மேட் கருப்பு , வெள்ளை மற்றும் சிவப்பு என 6 வண்ணங்களில் வரவுள்ளது. முகப்பு விளக்கில் பகல் நேர எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் 270மிமீ பிடெல் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக்ப் ஃபோர்க்குகள் பின்பக்கத்தில் மோனோசாக் கேஸ் சாக் அப்சார்பருடன் ஸ்பீரிங் கொடுக்கப்பட்டுள்ளது.

17 இஞ்ச் அலாய் மேக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற டயர் 90/90 R17 மற்றும் பின்புற 130/70 R17 டிவிஎஸ் ஶ்ரீ சக்ரா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்பீளிட் இருக்கைகளுடன் விளங்கும் அப்பாச்சி 200 பைக்கின் விலை ரூ. 85 ,000 முதல் ரூ.95,000 வரையிலான விலைக்குள் எக்ஸ்ஷோரூம் அமையலாம். பஜாஜ் 200ஏஎஸ் மாடலுக்கு மிகுந்த சவாலினை தரவல்லதாக விளங்கும்.

[envira-gallery id=”5537″]

Recent Posts

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

1 day ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

1 day ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

3 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக…

3 days ago