டெல்லியில் டீசல் கார் தடை – அதிர்ச்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

தலைநகர் டெல்லியில் டீசல் கார்களுக்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவஙனங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தியர்களின் டீசல் கார் மோகத்துக்கு முதல் தடையாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

tuv300

உலகின் மிக மாசடைந்த நகரங்களில் முதல் இடத்தை டெல்லி பிடித்தது. மேலும் உலகளவில் பாதிக்கப்பட்ட முதல் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 13 நகரங்கள் இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முறையான பாரமரிப்பு இருந்தாலும் சில ஆண்டுகளை கடந்தாலே டீசல் வாகனங்கள்  மிக மோசமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்டதாகும்.

10 ஆண்டுகளுக்கு மேலான எந்தவொரு டீசல் வாகனங்களுக்கும் புதுப்பிக்க அனுமதி கிடையாது. மேலும் புதிய டீசல் வாகனங்கள் டெல்லியில் பதிவு செய்ய இயலாது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் டீசல் வாகனங்களை வாங்கக்கூடாது மற்றும் பயன்பாட்டில் உள்ள டீசல் வாகனங்களை அரசு குறைக்க வேண்டும்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

மஹிந்திரா , டாடா , போன்ற நிறுவனங்கள் இப்பொழுதுதான் பெட்ரோல் என்ஜின்கள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. டாடா நிறுவனம் ரெவோட்ரான் என்ஜின் மூலம் தன்னுடைய மூன்று புதிய மாடல்களில் பெட்ரோல் மூலம் களமிறங்கிவிட்டது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் முதல் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி 100 காரினை அடுத்த வருட தொடக்கத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மேலும் விற்பனையில் உள்ள மற்ற மாடல்களிலும் பெட்ரோல் ஆப்ஷன் இல்லாத காரணத்தால் மஹிந்திரா பெரிதும் பாதிக்கும்.

மாருதி சுசூகி , ஹூண்டாய் , ஹோண்டா போன்ற மற்ற நிறுவனங்கள் பெட்ரோல் மாடலில் சிறப்பான பங்களிப்பினை கொண்டுள்ளன. இதுதவிர வர்த்தக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டாடா , அசோக் லேலேன்ட் , மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் பாதிக்கும்.

மேலும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள்  டீசல் என்ஜின் தயாரிப்புக்கு பல ஆயிரம் கோடிகள் முதலீடு செய்துள்ளன. சில ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மாடலில் டீசல் வாகனங்கள் மட்டுமே உள்ளன.

எந்தவொரு டீசல் வாகனமும் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் மொத்த விற்பனையில் 7 சதவீத பங்கினை டெல்லி கொண்டுள்ளது. இதனால் 12,000 டீசல் கார்கள் வரை விற்பனையில் பாதிப்பு ஏற்படும். மேலும் டீசல் வாகனங்களை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒற்றை இலக்க கார்கள்

ஜனவரி 1ந் தேதி முதல் தலைநகர் டில்லியில் ஒற்றை இலக்க கார்கள் 1ந் தேதியும் , இரட்டை இலக்க கார்கள் 2 ந் தேதியும் என இயக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 1, 3, 5, 7 முதல் 9999 வரை உள்ள ஒற்றை இலக்க எண் கார்களை ஒற்றை இலக்க தேதியில் அதாவது 1, 3, 5 , முதல் 30 வரை உள்ள ஒற்றை இலக்க தேதியில் மட்டுமே இயக்க வேண்டும். இரட்டை இலக்க கார்களுக்கு இரட்டை இலக்க தேதியாகும்.

இந்த நடைமுறை சோதனை ஓட்ட முறை ஜனவரி 1ந் தேதி முதல் 15ந் தேதி வரை ஆய்வு செய்ய உள்ள டெல்லி அரசாங்கம் அதனை தொடர்ந்து முடிவு செய்யப்படும். மேலும் டெல்லியில் டீசல் கார்களுக்கு நிரந்தர தடை வருமா என்பது ஜனவரி 6ந் தேதி தெரியவரும்.

NGT bans new diesel vehicle registration in Delhi

Exit mobile version