Automobile Tamilan

டெஸ்லா மாஸ்டர் பிளான் வெளியானது : எலான் மஸ்க்

டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அடுத்த 10 ஆண்டுகளுக்கான டெஸ்லா மாஸ்டர் பிளான் ( ‘Master Plan, Part Deux’) ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டெஸ்லா காம்பேக்ட் எஸ்யூவி , பிக்-அப் டிரக் ,  கனரக டிரக் மற்றும் பயணிகள் வாகனம் போன்றவற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.

2017-Tesla-Model-3

முதல் 10 ஆண்டுகளுக்கான முதல் திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் 10 ஆண்டுகளை கடக்கும் நிலையில் அடுத்த இரண்டாம் கட்ட திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளடெஸ்லா மாஸ்டர் பிளான் முக்கிய அம்சமாக சூரிய ஆற்றலை பெறும் வகையிலான கார்களின் மேற்கூறை , கார் பகிர்தல் மற்றும் தானியங்கி நுட்பத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

டெஸ்லா மாஸ்டர்பிளான்

சோலார் மேற்கூறை

சோலார் பேனல்களை கொண்ட மேற்கூறை மிக அழகாக மற்றும் நேர்த்தியாக வாகனங்களுடன் இணைக்கப்பட்டு மிக சிறப்பான கார் மாடலாக இருக்கும் என எலான் மஸ்க் கூறிப்பிட்டுள்ளார். மேலும் கார் வாங்கும் அனுபவத்தை விவரிக்கும்பொழுது ஓன் கார் முன்பதிவு அனுபவம் , ஒன் இன்ஸ்டாலேஷன் , ஓன் சர்வீஸ் கான்டேக்ட் , ஒன் போன் ஆப் என விவரித்துள்ளார்.

தானியங்கி நுட்பத்துக்கு முன்னுரிமை

டெஸ்லா கார் மாடல்களில் தற்பொழுது உள்ள ஆட்டோபைலட் நுட்பம் பீட்டா நிலையில்தான் உள்ளது. ஆட்டோபைலட் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றது. பீட்டா லேபிள் நீக்கப்பட்டு முழுமையான செயல்பாட்டுக்கு ஆட்டோ பைலட் நுட்பம் வரும் பொழுது சராசரியாக அமெரிக்கா கார்களின் பாதுகாப்பினை விட 10 மடங்கு கூடுதலாக இருக்கும்.

அனைத்து டெஸ்லா மாடல்களும் முழுமையாக வாகனங்களே சுயசார்பாக ஓட்டுனராக செயல்படும் தன்மையை பெற்றிருக்கும். ஒருவேளை தானியங்கி டிரைவிங் செயலிழக்கும் பட்சத்தில் தானாகவே பாதுகாப்பாக செயல்பட்டு வாகனத்தின் பிரேக் இயக்கப்படும் அல்லது பாதுகாப்பாக வாகனம் பயணிக்கும் வகையில் மேம்பாடுகளை கொண்டதாக நவீன நுட்பத்தினை பெற்று விளங்கும். சராசரி மனித ஓட்டுனரின் செயல்பாட்டை விட மிக நுனுக்கமான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்படும்.

கார் பகிர்தல்

எலான் மஸ்க் வெளியிட்டுள்ள திட்டத்தில் முக்கிய அம்சமாக குறிப்பிடப்படும் மற்றொரு அம்சமான கார் ஷேரிங் எனப்படும் கார் பகிர்தல் பற்றி குறிப்பிடுகையில் செல்ஃப்-டிரைவிங் முறை முழுபயன்பாட்டுக்கு அதிகார்வப்பூர்வமாக அனுமதி வழங்கப்படும் பொழுது கார்களை ஷேரிங் முறையில் மற்றவர்களின் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது சராசரியாக கார் உரிமையாளர் 5 % முதல் 10 % மட்டுமே தினசரி பயன்படுத்துகின்றார். மற்ற நேரங்களில் காரினை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக பொருளாதர ரீதியாக உதவிகரமாக அமையும் வகையில் தெஸ்லா பிளீட் சேவை அமையும்.

2017 Tesla Model S

எதிர்கால மாடல்கள்

மிகுந்த வரவேற்பினை பெறும் வகையிலான காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் மற்றும் புதிய வகையான பிக்-அப் டிரக் போன்றவற்றை டெஸ்லா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகின்றது.  மேலும் சரக்கு வாகனங்களுக்கு ஏற்ற கனரக டிரக் மற்றும் நெரிசல் மிகுந்த நகர மக்களுக்கு ஏற்ற வகையிலான அர்பன்-டிரான்ஸ்போர்ட்  வாகனம் போன்றவற்றின் கான்செப்ட் மாடல்கள் அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா மோட்டார்ஸ் தலைவர் எலான் மஸ்க் மாஸ்டர் பிளான் திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

 

Exit mobile version