Auto News

டொயோட்டா ஆல்பார்ட் எம்பிவி இந்தியா வருகையா

Spread the love

எம்பிவி ரக கார் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ள டொயோட்டா நிறுவனம் டொயோட்டா ஆல்பார்ட் (Toyota Alphard) சொகுசு ஹைபிரிட் எம்பிவி  காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள புதிய தலைமுறை இன்னோவா க்ரீஸ்ட்டா எம்பிவி காரினை தொடர்ந்து சொகுசு எம்பிவி ரக பிரிவில் உள்ள ஆல்பார்ட் எம்பிவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சினை தொடங்கியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய சந்தையில் உள்ள டொயோட்டா ஆல்பார்ட் கார் தற்பொழுது ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் விற்பனைக்கு சென்றுள்ளதால் இந்தியாவில் சொகுசு சந்தை பிரிவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

6 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன்களில் தாரளமான இடவசதி மற்றும் சிறப்பான பல நவீன வசதிகளை பெற்றுள்ள ஆல்பார்ட் காரின் நீளம் 4,915 மில்லிமீட்டர் , 1,850 மில்லிமீட்டர் அகலமும் 1,895 மில்லிமீட்டர் உயரத்துடன் 3,000 மில்லிமீட்டர் வரையிலான வீல்பேஸ் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் 2.5 லிட்டர் மற்றும் 3.5 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கின்ற ஆல்பார்ட் எம்பிவி காரில் இந்தியாவில் 2.5 லிட்டர் ஹைபிரிட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் ஆல்பார்ட் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. டொயோட்டா ஆல்பார்ட் விலை ரூ.50 லட்சத்தில் அமையலாம்.

தகவல்உதவி : overdrive


Spread the love
Share
Published by
MR.Durai
Tags: MPVToyota