பஜாஜ் வி பைக் வரிசையில் 2 புதிய பைக்குகள்

பஜாஜ் வி வரிசை பைக்கில் இரண்டு புதிய பைக்குகளை அடுத்த ஒரு வருட காலகட்டத்துக்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பஜாஜ் வி20 மற்றும் வி40 என்ற பெயரில் இரு புதிய பைக்குகள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு  நியோ-கிளாசிக் டிசைன் வடிவ அமைப்பில் கஃபே ரேஸர் மற்றும் க்ரூஸர் பைக்குகளின் இரு கலவையிலும் வித்தியாசமான தோற்ற அமைப்பில் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

150 சிசி சந்தையில் மிக வலுவான போட்டியாளர்களான சிபி யூனிகார்ன் வரிசை பைக்குகள் மற்ற பைக்குகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. இதே தோற்ற அமைப்பின் கொண்ட 200சிசி இஞ்ஜின் மற்றும் 400சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை அடுத்த ஒரு வருட காலகட்டத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வி20 பைக்கில் 200சிசி என்ஜின் பிரிவில் பல்சர் ஆர்எஸ்200 பொருத்தப்படலாம் மற்றும் வி40 பைக்கில் வரவுள்ள பல்சர் சிஎஸ்400 இஞ்ஜின் பொருத்தப்படலாம். காம்யூட்டர் 150சிசி பரிவில் விற்பனைக்கு வந்த பஜாஜ் வி15 பைக்கில் 12 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் 13 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

Bajaj V range Bike Photo Gallery

[envira-gallery id=”5741″]

Exit mobile version