Automobile Tamil

பலேனோ , விட்டாரா பிரெஸ்ஸா உற்பத்தி அதிகரிப்பு

மாருதி சுசூகி பலேனோ , மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் ஸ்விப்ட் ,  டிசையர்  கார்கள் உற்பத்தியை குறைத்துள்ளது.

maruti-suzuki-vitara-brezza-yellow

விற்பனையில் பெரிய எண்ணிக்கையில் சரியவில்லை என்றாலும் ஸ்விப்ட் , டிசையர் கார்களின் பிரிவில் பலேனோ , விட்டாரா பிரெஸ்ஸா கார்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இரு கார்களுமே மிக சிறப்பான வரவேற்பினை பெற்று அதிகப்படியான முன்பதிவினை பெற்றுள்ளதால் காத்திருப்பு காலத்தினை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இரு மாடல்களுக்கும் 4 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி கொடுக்கும் நோக்கில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு சிறப்பான வரவேற்பு

எஸ்யூவி சந்தையில் ஏப்ரல் 2016 மாத விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பலேனோ காரும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் எலைட் ஐ20 காருக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

பலேனோ காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பெலினோ ஆர்எஸ் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் அடுத்த சில மாதங்களில் வரவுள்ளது. மேலும் பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் பெட்ரோல் மாடல் விரைவில் வரவுள்ளது.

 

Exit mobile version