பிஎம்டபுள்யூ ஜி310 ஜிஎஸ் இந்தியா வருகை உறுதியானது

கடந்த வாரம் இஐசிஎம்ஏ 2016 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் வெளியான பிஎம்டபுள்யூ ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2017ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளதை பிஎம்டபுள்யூ உறுதி செய்துள்ளது.

 

ஓசூரில் அமைந்துள்ள டிவிஎஸ் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள பிஎம்டபூள்யூ ஜி310 ஆர் பைக்கினை தொடர்ந்து ஜி310 ஜிஎஸ் மாடலும் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு ஏற்றுமதி மையமாக செயல்படும்.

பிஎம்டபுள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் தொடக்கநிலை அட்வெனச்சர் ரக மாடலாக விளங்க உள்ள ஜி310 ஜிஎஸ் மாடலானது ஜி310 ஆர் நேக்டு ஸ்போர்ட் பைக்கினை அடிப்படையாக கொண்ட மாடலாகும். இதில் 34 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 313சிசி ஒற்றை சிலிண்டர்எ லிக்யூடூ கூலிங் எஞ்சினை பெற்றுள்ளது.இதன் டார்க் 28 நியூட்டன்மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. இதன் உச்ச வேகம் மணிக்கு 143 கிமீ ஆக இருக்கலாம்.

பிஎம்டபுள்யூ ஜி310 ஜிஎஸ் முழுவிபரம்

டிவிஎஸ்-பிஎம்டபுள்யூ கூட்டணியில் உருவான ஜி310 ஆர் பைக்கினை தொடர்ந்து இதே மாடலை அடிப்படையாக கொண்ட ஃபுல் பேரிங் மாடலை டிவிஎஸ் அகுலா 310 என்ற பெயரில் டிவிஎஸ் தயாரிக்கின்றது. இதே மாடலை அடிப்பையாக கொண்ட அட்வென்ச்சர் ரக மாடலை ஜி310 ஜிஎஸ் என்ற பெயரில் பிஎம்டபுள்யூ விற்பனை செய்ய உள்ளது.

பிஎம்டபிள்யூ G310 GS படங்கள்

 

Exit mobile version