புதிய எஸ்யூவி கார்கள் – 2016

2016ம் ஆண்டில் சந்தைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி கார்கள் , விலை மற்றும் விற்பனைக்கு வரும் மாதம் போன்றவற்றை புதிய எஸ்யூவி கார்கள் 2016 பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்திய வாடிக்கையாளர்களின் எஸ்யூவி மோகம் அதிகரித்து வருகின்றது.

 

  1. மஹிந்திரா கேயூவி100

வரும் 18ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா கேயூவி100  ( KUV100 -Kompact Utility vehicle ) எஸ்யூவி கார் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் வரவுள்ளது. சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் எக்ஸ்யூவி500 காரின் தாத்பரியங்களை தழுவி சிறிய கார் மாடலாக இருக்கும். மஹிந்திரா கேயூவி100 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரும். மேலும் இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

mahindra-kuv100-suv-car-side

 

வருகை : ஜனவரி 2016

விலை : ரூ.4.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : வேகன் ஆர் , மாருதி இக்னிஸ்

 2. மாருதி YBA

மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலாக வரவுள்ள மாருதி YBA எஸ்யூவி கார் நெக்ஸா வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. இதில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ளது.

வருகை : பிப்ரவரி 2016

விலை : ரூ.6.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : இகோஸ்போர்ட் , டியூவி300

3. மாருதி சுசூகி விட்டாரா

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரிமியம் எஸ்யூவி கார் மாடலாக சுசூகி விட்டாரா விளங்கும். எஸ் க்ராஸ் கிராஸ்ஓவர் ரக மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ள விட்டாரா காரில் 118 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் . விட்டாராவில் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வர வாய்ப்புகள் உள்ளது.

வருகை : அக்டோபர் 2016

விலை : ரூ.17 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : சிஆர் வி , எட்டி , எக்ஸ்யூவி500

4. மாருதி சுசூகி இக்னிஸ்

மாருதி சுசூகி YBA மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள இக்னிஸ் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் . இந்த மாடலில் மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வரலாம்.

வருகை : ஆகஸ்ட் 2016

விலை : ரூ.6.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : கேயூவி100 , ஈக்கோஸ்போர்ட்

 

5.ஹோண்டா பிஆர்-வி

ஹோண்டா பிரியோ தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள 7 இருக்கைகள் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடலான ஹோண்டா பிஆர்-வி காரில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல்  என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

வருகை : மார்ச் 2016

விலை : ரூ.8.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : டஸ்ட்டர் , க்ரெட்டா , டெரானோ , எஸ் க்ராஸ், குவான்ட்டோ

 

6. டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் கான்செப்ட் அடிப்படையில் உருவாக உள்ள ஆஸ்பிரே என்ற குறியீட்டு பெயரில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் வரவுள்ளது.

வருகை : நவம்பர் 2016

விலை : ரூ.8.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : இக்கோஸ்போர்ட் , டியூவி300 , இக்னிஸ்

7. ரெனோ கிராண்ட் கேப்டர்

டஸ்ட்டர் எஸ்யூவி காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள ரெனோ கிராண்ட் கேப்டர் எஸ்யூவி காரில் 7 இருக்கைகளுடன் பிரிமியம் வசதிகளுடன் விளங்கும். இதில் 1.5 லிட்டர் இஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

வருகை : நவம்பர் 2016

விலை : ரூ.14.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : எக்ஸ்யூவி500

8. சாங்யாங் டிவோலி

சாங்யாங் பிராண்ட் வாயிலாக மஹிந்திரா களமிறக்க உள்ள இரண்டாவது மாடலாக இருக்கும். சாங்யாங் டிவோலி என்ற பெயரிலோ அல்லது மாற்றியமைகப்பட்ட மாடலாகவோ வரலாம் என தெரிகின்றது. இதில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனுடன் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.

வருகை : நவம்பர் 2016

விலை : ரூ.15.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : எக்ஸ்யூவி500 , க்ரெட்டா , எட்டி , டெரானோ

9. நிசான் எக்ஸ் டரெயில்

மீண்டும் புதிய தலைமுறை எக்ஸ் டரெயில் எஸ்யூவி காரை நிசான் களமிறக்க உள்ளது.  இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக நிசான் எக்ஸ் டரெயில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

வருகை : ஐனவரி 2016

விலை : ரூ.29.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : சான்டா ஃபீ

10.ஹூண்டாய் டீயூசான்

க்ரெட்டா வெற்றியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் டீயூசான் எஸ்யூவி மாடலை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. க்ரெட்டா காருக்கு மேலாக சான்டா ஃபீ காருக்கு கீழாக இடையில் டீயீசான் நிலைநிறுத்தப்பட உள்ளது.

 

வருகை : இறுதி 2016

விலை : ரூ.19.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் :   எட்டி , விட்டாரா , சிஆர் வி

 

11.மஹிந்திரா குவான்ட்டோ

குவான்ட்டோ காரின் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் புதிய பெயரில் எக்ஸ்யூவி 500 காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கும். 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மெனுவல் தவிர ஏஎம்டி மாடலிலும் வரவுள்ளது. டியூவி300 காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது.

வருகை : மார்ச் 2016

விலை : ரூ.8.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் :   டஸ்ட்டர் , பிஆர் வி

12.ரெனோ டஸ்ட்டர்

டஸ்ட்டர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் மெனுவல் தவிர ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரவுள்ளது.

வருகை : பிப்ரவரி 2016

விலை : ரூ.9.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் :   ஸ்கார்ப்பியோ , க்ரெட்டா , டெரோனோ.

Exit mobile version