Auto News

புதிய க்ரெட்டா எஸ்யுவி பிரவுச்சர் விவரம்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி காரின் முழுமையான விவரங்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன. மேலும் க்ரெட்டா கார் விலை விபரம் வெளிவந்து விட்ட பொழுதும் உறுதியான விலை நாளை அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய எஸ்யுவி சந்தையை புரட்டி போட வரவுள்ள க்ரெட்டா எஸ்யுவி அறிமுகத்திற்க்கு முன்னரே 10,000த்திற்க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று உள்ளதால் அதித எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விற்பனையில் உள்ள டஸ்ட்டர் , டெரோனோ , ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவிருக்கும் மாருதி எஸ் கிராஸ் போன்ற கார்களுக்கு மிக கடும் சவாலினை க்ரெட்டா தரவுள்ளது.

ஏபிஎஸ் , இபிடி , என்ஜின் இம்மொபைல்சர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பேஸ் , S ,S+ , SX+ மற்றும் SX(O)அனைத்து வேரியண்டிலும் உள்ளது.

க்ரெட்டா 7 வண்ணங்கள்

முன்பக்கம் இரட்டை காற்றுப்பைகள் , ரியர் பார்க்கிங் சென்சார் S+ , SX+ மற்றும் SX(O) என மூன்று வேரியண்டிலும் உள்ளது. பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள் டாப் மாடலில் மட்டுமே உள்ளது.

சில்வர் , வெள்ளை , பீஜ் , கருப்பு , சிவப்பு ,டஸ்ட் மற்றும் நீலம் என மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் வாசிக்க ; ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி விமர்சனம்

க்ரெட்டா விலை விபரம் (ex-showroom)

க்ரெட்டா 1.6 லிட்டர் பெட்ரோல்  

க்ரெட்டா  1.6 Base 6MT – ரூ. 9.14 லட்சம்
க்ரெட்டா  1.6 SX 6MT – Rs. 10.11 lakhs
க்ரெட்டா  1.6 SX+ 6MT – ரூ. 11.79 lakhs

க்ரெட்டா  1.4 லிட்டர் டீசல்  

க்ரெட்டா 1.4 Base 6MT – ரூ. 9.91 லட்சம்
க்ரெட்டா  1.4 S 6MT – ரூ. 11.01 லட்சம்
க்ரெட்டா  1.4 S+ 6MT – ரூ. 12.01 லட்சம்

க்ரெட்டா  1.6 லிட்டர் டீசல்  

க்ரெட்டா  1.6 SX 6MT – ரூ. 12.38 லட்சம்
க்ரெட்டா  1.6 SX+ 6MT – ரூ. 13.55 லட்சம்
க்ரெட்டா  1.6 SX (O) 6MT – ரூ. 14.53 லட்சம்
க்ரெட்டா  1.6 SX+ 6AT – ரூ. 14.47 லட்சம்

MT- Manual transmission AT-Automatic Transmission O- optional

ஹூண்டாய் க்ரெட்டா பிரவுச்சர் விவரம் – பெரிதாக தெரிய படத்தின் மேல் க்ளிக் பன்னுங்க.

Hyundai Creta SUV Brochure details
Share
Published by
MR.Durai
Tags: Hyundai