Site icon Automobile Tamilan

புதிய டொயோட்டா எட்டியோஸ் சோதனை ஓட்டம்

மேம்படுத்ததப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நிலையில் எட்டியோஸ் சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் வெளியாகியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த எட்டியோஸ் கார் சில மாற்றங்களை பெற்று வந்துள்ளது. தற்பொழுது வெளியாகியுள்ள சோதனை படங்களின் வாயிலாக முகப்பு மற்றும் பின்புற பம்பர் போன்றவற்றில் மாற்றங்களை பெற்றிருக்கும்.  உட்புறத்தில் ஸ்டீயரிங் வீல் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , இருக்கைகளை பெற்றிருக்கலாம்.

முகப்பில் புதிய கிரில் அமைப்புடன் கூடிய பம்பர் , பனி விளக்கு , பின்புற தோற்றத்தில் மேம்படுத்தப்பட்ட பம்பரினை பெற்றிருக்கும். ஆனால் என்ஜின் ஆற்றலில் எந்த மாற்றங்களும் இருக்காது.

90 PS ஆற்றலை வெளிப்படுத்ததும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 140Nm ஆகும். 68 PS ஆற்றலை வெளிப்படுத்ததும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 170Nm ஆகும்.  இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஃபேஸ்லிஃப்ட் டொயோட்டா எட்டியோஸ் விற்பனைக்கு வரலாம். மேலும் எட்டியோஸ் லிவோ மாடலும் இதே அளவிலான மாற்றங்களை பெற்றிருக்கும்.

படங்கள் உதவி ; motoroids

Exit mobile version