மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800 கார் ரூ. 2.61 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாருதி ஆல்ட்டோ 800 காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ ஆகும்.
முந்தைய மாடலைவிட க்கூடுதலாக 9 சதவித எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும். தற்பொழுது ஆல்ட்டோ 800 காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ ஆகும். சிஎன்ஜி மாடலில் ஒரு கிலோ வாயுக்கு 33கிமீ தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஆல்டோ 800 காரின் முன்புறத்தில் முகப்பு பம்பர் , பனி விளக்கு அறை , புதுப்புக்கப்பட்ட முகப்பு விளக்கு ஆகியவற்றினை பெற்றுள்ளது. புதிய பம்பர் சேர்க்கப்பட்டுள்ளதால் காரின் நீளம் 35மிமீ அதிகரித்து 3430மிமீ (முந்தைய நீளம் 3395)பெற்றுள்ளது. பயணிகள் பக்கவாட்டு ஓஆர்விஎம் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணங்களாக பச்சை மற்றும் நீளம் சேர்க்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் கிரே வண்ணத்திலான இன்டிரியர் , ஃபேபரிக் இருக்கைகள் , மேம்படுத்தப்பட்ட பின் இருக்கைகளுக்கு ஹெட்ரெஸ்ட் , ரிமோட் கீலெஸ் என்ட்ரி , பின்புற கதவுகளுக்கு குழந்தை பாதுகாப்பு லாக் போன்றவற்றை பெற்றுள்ளது. ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் இணைக்கப்படவில்லை.
புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் விலை பட்டியல் (சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)