Categories: Auto News

புதிய ஹோண்டா ஜாஸ் கார் வெற்றி பெறுமா ?

ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் ஜூலை 8ந் தேதி இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வருகின்றது. ஜாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

மிகவும் அதிகப்படியான இடவசதி கொண்ட பிரிமியம் ஹேட்ச்பேக் காரான ஜாஸ் புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்திய சந்தையில் விரைவில் வலம் வரவுள்ளது.

தோற்றம்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் முகப்பில் குரோம் பட்டைக்கு மேலே ஹோண்டா இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டைக்கு கீழுள்ள ஸ்டீரிப் பட்டையுடன் இணைத்து பாத்தால் சிரிக்கும் உதடுகள் போல் உள்ளது.

கருப்பு நிற காற்று வென்ட் அறையில் வட்ட வடிவ பனி விளக்குகளை கொண்டுள்ளது. முகப்பு விளக்குகளும் நேர்த்தியாக உள்ளது.

பக்கவாட்டில் அதிகப்படியான வளைவுகள் ஏரோடைனமிக்ஸ் நோக்கத்துக்காக தரப்பட்டுள்ளது. வீல் ஆர்ச் நன்றாக உள்ளது. பின்புறத்தில் டெயில் விளக்குகள் மற்றும் ஸ்பாய்லர்கள் நேர்த்தியாக உள்ளது.

உட்புறம்

ஹோண்டா ஜாஸ் காரின் உட்புறத்தில் பல பாகங்களை ஹோண்டா சிட்டி காரில் இருந்து பெற்றுள்ளதாக தெரிகின்றது. சமீபத்தில் வெளிவந்த சோதனை ஓட்ட படங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் ,ஹோண்டாவின் ஆடியோ வீடியோ நேவிகேஷன் அமைப்பு டாப் மாடலில் இருக்கும் என தெரிகின்றது.

spy image credit :cardheko
மிக சிறப்பான இடவசதியுடன் பின்புற இருக்கைகளும் அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

என்ஜின்

ஹோண்டா ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை தரவல்ல 1.2 லிட்டர் i-VTEC  பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதே என்ஜின் பிரியோ மற்றும் அமேஸ் காரில் உள்ளது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் மாடலும் கிடைக்கும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் CVT  தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் போட்டியாளர்கள்

ஹோண்டா ஜாஸ் காருக்கு போட்டியாக மிகவும் வலுவான சந்தையை கையில் வைத்துள்ள ஸ்விப்ட் மற்றும் எலைட் ஐ20 காருடன் போட்டியிட உள்ளது. மேலும் போலோ , போல்ட் , போன்ற கார்களுடன் போட்டியிட தயாராக உள்ளது.

மேலும் வாசிக்க ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெற்றி பெறுமா ?

டொயோட்டா வயோஸ் கார் வெற்றி பெறுமா ?

ஹோண்டா ஜாஸ் விலை

ஜாஸ் காரின் விலை ரூ. 6.50 லட்சத்தில் இருந்து 9 லட்சத்திற்க்குள் இருக்கும்.

வருகை ;ஜூலை 8ந் தேதி

ஹோண்டா ஜாஸ் வெற்றி பெறுமா ?

மிகவும் சவாலான போட்டியை எதிர்கொள்ளும் ஜாஸ் காரின் அதிகப்படியான இடவசதி ஹோண்டாவின் பிராண்டு மதிப்பு , முந்தைய தலைமுறை ஜாஸ் வாடிக்கையாளர்கள் வரவேற்பு , டீசல் என்ஜின் ஆப்ஷன் போன்றவை மிக பெரும் பலமாபக அமையும். சிறப்பான விலை அமைந்தால் ஜாஸ் நிச்சயமாக வெல்லும்.

All New Honda Jazz launch July 8th in India. New Jazz will come Petrol and Diesel engine.

Recent Posts

ஹூண்டாய் புதிய அல்கசாரின் ஸ்பை படங்கள் வெளியானது

க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆறு மற்றும் ஏழு இருக்கைகளை கொண்ட அல்கசார் எஸ்யூவி காரின் இறுதி…

1 hour ago

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

2 days ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

2 days ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

3 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago