Automobile Tamilan

மாருதி கார்களில் SHVS ஹைபிரிட் நுட்பம்

மாருதி சுசூகி தனது கார் மாடல்களில் SHVS ஹைபிரிட் நுட்பத்த்தினை பரவலாக்க திட்டமிட்டுள்ளது. மாருதி சுசூகி சியாஸ் காரில் ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு கடந்த 1ந் தேதி வந்துள்ளது.
மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா 

சிறப்பான மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்எச்விஎஸ் ஹைபிரிட் நுட்பத்தில் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு , பிரேக் ஆற்றலை சேமிக்கும் ரீஜெனரேஷன் மற்றும் என்ஜின் பவர் அசிஸ்ட் போன்றவை உள்ளது.

மேலும் படிக்க ; மாருதி சுசூகி SHVS நுட்பம்

மாருதி சுசூகி கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின்பொருத்தப்பட்ட மாடல்களில் SHVS ஹைபிரிட் நுட்பத்தினை புகுத்த திட்டமிட்டுள்ளது. சியாஸ் வரிசையில் இணைய உள்ள மாடல்கள் எர்டிகா , ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற மாடல்களாகும்.

மேலும் வரவிருக்கும் புதிய இக்னிஸ் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் இந்த நுட்பத்தினை புகுத்தலாம் என தெரிகின்றது. மேலும் புதிய எஸ் க்ராஸ் மாடலிலும் இந்த நுட்பம் வர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க ; மாருதி சியாஸ் SHVS டீசல் மைலேஜ்

மேம்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா வரும் அக்டோபர் மாதம் வரவுள்ளது . அதனை தொடர்ந்து டிசையர் ஏஎம்டி வரவுள்ளது. மேலும் காம்பேக்ட் எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் வரலாம்.

Maruti to increases SHVS technology on more cars 

Exit mobile version