மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி இந்தியா வருகை

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனம் இந்தியாவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பெர்ஃபாமென்ஸ் ரக கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6659 கார்களை விற்பனை செய்துள்ளது.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி கார்

இந்தியாவில் சொகுசு கார் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரி 2015 முதல் ஜூன் 2015 வரை சுமார் 6659 கார்களை விற்பனை செய்து மெர்சிடிஸ் பென்ஸ் 41 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

பெர்ஃபாமென்ஸ் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் AMG GT S மாடலில் 503பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் பை-டர்போ வி8 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. AMG GT  மாடலில் 456பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் பை-டர்போ வி8 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

AMG GT S டாப் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. இந்த காரின் விலை ரூ.2.5 கோடி இருக்கலாம்.

Mercedes-Benz Confirmed to Launched AMG GT in India in 2015

Exit mobile version