மொபைல் பேசினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து : தமிழக அரசு

மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேக பயணம் போன்ற சட்ட விதிகளுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும்படி, அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

டிரைவிங் லைசென்ஸ் ரத்து

இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்ற வாகன விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு குழு விவாதித்ததின் அடிப்படையில் தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளை மிக கடுமையாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ள அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா,  போதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேக பயணம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின்  லைசென்ஸ், உடனடியாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், கடந்த ஜனவரி- மார்ச் 2017 வரையலான காலாண்டில் மட்டும், அதிவேகமாக பயணம் செய்த, 61 ஆயிரத்து, 177 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரின் உரிமமும் ரத்து செய்யப்படவில்லை. அதே போல், 71 ஆயிரம் பேர் மீது, மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்கு பதியப்பட்டும், யாருடைய ஓட்டுநர் உரிமமும் ரத்து செயப்படவில்லை.

இனி, இதுபோன்ற விதிமீறல்களுக்க அபராதம் மட்டுமல்லாமல், உடனடியாக டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version