Automobile Tamil

யமஹா கார் தயாரிக்க திட்டம்

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. நகரங்களில் பயன்படுத்துவதற்க்காக சிறிய ரக காரினை யமஹா தயாரிக்க உள்ளனர்.
யமஹா கார் மோட்டிவ்
Yamaha Motiv car concept

நடுத்தர மக்களினை கருத்தில்கொண்டு 2 நபர்கள் பயணிக்கும் வகையில் சிறிய ரக கார்களை ஐரோப்பா சந்தையில் 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த சிறிய ரக கார்கள் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கலாம். பெட்ரோல் என்ஜின் மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தினை தரக்கூடியதாகவும் சுற்றுசூழலுக்கு அதிக பாதிப்பில்லாத வகையில் உருவாக்க உள்ளனர்.

கடந்த 2013 டோக்கியோ மோட்டார் ஷோவில்  1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பார்வைக்கு வைத்திருந்தது. மேலும் மோட்டிவ் கான்செப்ட் காரும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் 2019 ஆம் ஆண்டில் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

Yamaha plans to car launch in European market by 2019

Exit mobile version