ராயல் என்ஃபீல்டு இரு கஸ்டம் பைக்குகள் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின்  மோ போவா மற்றும் டர்ட்டி டக் என இரு கஸ்டம் மோட்டார்சைக்கிள்கள் பிரான்சில் நடைபெற்ற வீல்ஸ் மற்றும் வேவ்ஸ் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் ஜூன் 8 முதல் 12 வரை நடைபெற்ற வீல்ஸ் மற்றும் வேவ்ஸ் திருவிழாவில் வெளியிடப்பட்டுள்ள மோ போவா மற்றும் டர்ட்டி டக் என இரு கஸ்டம் மாடல்களும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் கஸ்டம் பைக் மாடல்களாகும்.

மோ போவா

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்ட மோ போவா டிராக்ஸ்டார் மாடலாக விளங்கும்.  கஸ்டம் பைக்கில் நிரந்தர 500 என்ஜினில் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனுடன் டர்போசார்ஜரை பெற்றுள்ளது. மேலும் மாற்றயமைக்கப்பட்ட புகைப்போக்கி ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டர்ட்டி டக்

மற்றொரு கஸ்டம் மாடலான டர்ட்டி டக் மோட்டார்சைக்கிள் காண்டினெண்டல் ஜிடி பைக் மாடலை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப் ரோடு வாகனங்களின் உந்துதலை அடிப்படையாக கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள டர்ட்டி டக் மாடல் பைக்கில் வட்ட வடிவ முகப்பு விளக்கிற்கு மாற்றாக செங்குத்தான புராஜெக்டர் முகப்பு விளக்குடன் காம்பேக்ட் டிஜிட்டல் இன்ஸ்டூருமெண்ட் கன்சோலை கொண்டுள்ளது.  ஆஃப் ரோடர் பைக்கிற்கு இணையான அம்சங்களை பெற்ற மாடலாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கஸ்டம் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் இரு கஸ்டம் மோட்டார்சைக்கிள்களை முதன்முறையாக ராயல் என்ஃபீல்ட் வெளியிட்டுள்ளது.

 

 

Exit mobile version