Automobile Tamilan

ரிமோட் மூலம் இயங்கும் ரேஞ்ச்ரோவர் – வீடியோ

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இரண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது. அவை ரிமோட் கட்டுப்பாடு மூலம் இயங்கும் கார் மற்றும் 180 டிகிரி கோணத்தில் தானியங்கி முறையில் காரை திருப்பும் வசதியாகும்.
ரிமோட் மூலம் இயங்கும் ரேஞ்ச்ரோவர்

ரிமோட் மூலம் இயங்கும் ரேஞ்ச்ரோவர் கார்

ரிமோட் மூலம் இயங்கும் வகையில் புதிய ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியின் உதவி மூலம் காருக்கு வெளியில் இருந்து இயக்கலாம்.

6 கிமீ வேகத்தில் 10மீட்டர் சுற்றளவுக்குள் இருந்து கொண்டு காரை இயக்கமுடியும். மிக குறுகிய இடங்களில் பார்க்கிங் செய்ய பெரிதும் இது உதவும்.

மல்டி பாயின்ட் டர்ன் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

டெட் என்ட் சாலைகளிலும் மற்றும் வாகனம் இதற்க்கு மேல் செல்ல முடியாது என கருதுகின்ற இடங்களில் 180 டிகிரி கோணத்தில் வாகனத்தினை திருப்பிக் கொள்ள இயலும். இந்த நுட்பமானது தானாகவே கியர் தேர்வு , வேகம் , மற்றும் பிரேக்கிங் தேர்வு செய்து கொள்ளும்.

வரும் காலங்களில் செல்ப் டிரைவ் கார்களுக்கான முன்னோட்டமாக இதனை ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிமுகம் செய்துள்ளது.

      [youtube https://www.youtube.com/watch?v=QjJ2wKCMq5w]

Jaguar Land Rover reveals two new advanced autonomous technologies

Exit mobile version