ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார்களில் விலை ஒவ்வொரு மூன்றாவது காலாண்டிலும் விலையை உயர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் க்ரெட்டா எஸ்யூவி கார் ரூ.15,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களில் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் க்ரெட்டா மாடலில் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் , 1.6 லிட்டர் பெட்ரோல் என மூன்று மாறுபட்ட இஞ்ஜின் ஆப்ஷன்களை பெற்று விளங்கும் க்ரெட்டாவில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
விற்பனைக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக விற்பனையில் சிறந்து விளங்கி வரும் க்ரெட்டா மாதந்தோறும் சராசரியாக 7000 கார்களுக்கு மேல் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. அனைத்து வேரியண்ட்களின் விலையை ரூ.15,000 உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. உற்பத்தி செலவு அதிகரிப்பே இதன் காரணமாகும். மேலும் மற்ற ஹூண்டாய் மாடல்களும் விலை உயர்வை சந்திக்கலாம்.
அடுத்த சில வாரங்களில் ஹூண்டாய் க்ரெட்டா ஆனிவர்சரி சிறப்பு எடிசன் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் பேஸ் டீசல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை இணைத்துள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா . டஸ்ட்டர் , டியூவி 300 , டெரோனா போன்ற எஸ்யூவிகளுக்கு நேரடியான போட்டியாக விளங்குகின்றது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…