Automobile Tamilan

ரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் – 2017

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கம்யூட்டர் எனப்படும் தொடக்கநிலை பைக் மாடல்களில் ரூ.60,000 விலைக்குள் கிடைக்கின்ற 5 சிறந்த பைக்குகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள பைக்குகள் அதிகப்படியான மைலேஜ் தரும் திறனை கொண்டதாகும்.

5 சிறந்த பைக்குகள்

இந்தியாவின் மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையில் 54.6 சதவீத பங்களிப்பினை கொண்டுள்ள தொடக்கநிலை மாடல்களான 100 முதல் 110சிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பைக் மாடல்களின் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையிலே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் முதன்மையான மற்றும் இந்தியாவின் முதன்மையான பைக் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் வரிசை பைக்குகள் முதலிடத்தில் உள்ளது. பெரும்பான்மையான இந்திய வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக அமையும் பைக் மாடலாக ஸ்பளென்டர் வரிசை விளங்குகின்றது.

 

ஸ்பிளென்டரில் மொத்தம் 5 வகை மாடல்கள் விற்பனையில் உள்ளது. அவற்றில் 4 மாடல்கள் 97.2சிசி இன்ஜின் பெற்றுள்ளது. ஐ3எஸ் அம்சத்தை பெற்றுள்ள ஐஸ்மார்ட் மாடலில் 110சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்டவைனையில் நுட்ப விபரம் மற்றும் விலை சேர்க்கப்பட்டுள்ளது.

 மாடல் (automobiletamilan) சிசி  பவர்  டார்க்  கியர்பாக்ஸ் விலை
ஹீரோ ஸ்பிளென்டர் 97.2 cc 8.3 ps @ 8000 rpm 8.05 Nm @ 5000 rpm 4-வேகம் Rs 50,580 – 51,910
ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் 97.2 cc 8.3 ps @ 8000 rpm 8.05 Nm @ 5000 rpm 4-வேகம் Rs 47,280-49,530
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 109.15 cc 7 kw @ 7500 rpm 9 Nm @ 5500 rpm 4-வேகம் ரூ. 54,080

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்சின் நம்பகமான மாடல்களின் ஒன்றான டிவிஎஸ் விக்டர் கடந்த ஏப்ரலில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. மறுபிரவசத்திற்கு பின்னரும் தனது வலிமையான பிராண்டு மதிப்பின் காரணமாக மிக விரைவாக வாடிக்கையாளர்கள் மத்தியில் விக்டர் தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது.

நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற மாடலாக டிவிஎஸ் விக்டர் பைக் மையப்படுத்தப்படுகின்றது.

 மாடல் (automobiletamilan) சிசி பவர் டார்க் கியர்பாக்ஸ் விலை
 டிவிஎஸ் விக்டர் 109.7 சிசி 9.6 ps @ 7500 rpm 9.4 Nm @ 6000 rpm 4 வேகம் ரூ. 51,215 – 53,215

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் 50,000 விலைக்கு கீழாக அமைந்துள்ள மாடல்களில் ஒன்றான பிளாட்டினா மீண்டும் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமோக வரவேற்பினை தொடக்கநிலை சந்தையில் பெற்று விளங்குகின்றது.

 மாடல்  (automobiletamilan) சிசி  பவர் டார்க் கியர்பாக்ஸ் விலை
பஜாஜ் பிளாட்டினா 102 சிசி 8.2 ps @ 7500 rpm 8.5 Nm @ 5000 rpm 4 வேகம் Rs 45,985

ஸ்பிளென்டர் பைக்குகளுக்கு மிக சவலாக ட்ரீம் வரிசை மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்க காலங்களில் அமோக ஆதரவினை கண்டுவந்த ட்ரீம் வகை பைக்குகள் கடுமையான சவாலினை போட்டியாளர்கள் மத்தியில் எதிர்கொண்டு வருகின்றது. மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கின்ற ட்ரீம் பைக்குகளில் ஒரே இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மாடல் சிசி  பவர் டார்க்  கியர்பாக்ஸ்  விலை

ஹோண்டா ட்ரீம் நியோ

109.19சிசி 8.25 hp @ 7500 rpm 8.63 Nm @ 5500 rpm 4 வேகம் ரூ. 49,844
ஹோண்டா ட்ரீம் யுகா 109.19சிசி 8.25 hp @ 7500 rpm 8.63 Nm @ 5500 rpm 4 வேகம் ரூ 51,741
ஹோண்டா ட்ரீம் CD 110 109.19சிசி 8.25 hp @ 7500 rpm 8.63 Nm @ 5500 rpm 4 வேகம் ரூ 44,765 – 46,96

ஹீரோ பைக் நிறுவனத்தின் மற்றொரு மாடலாக விளங்குகின்ற பேஸன் ப்ரோ மாடலிலும் 100சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விற்பனையில் உள்ள 100சிசி மாடல்களில் சற்று கூடுதலான விலை கொண்டதாக பேஸன் ப்ரோ விளங்குகின்றது.

 மாடல் சிசி  பவர் டாரக் கியர்பாக்ஸ் விலை
ஹீரோ பேஸன் ப்ரோ 97.2 சிசி 8.36 @ 8000 rpm 8.05 Nm @ 5000 rpm 4 வேகம் ரூ 54,205

 

மேலும் இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க ஃபேஸ்புக் முகவரி -fb.com/automobiletamilan

பின்குறிப்பு – சிறந்த பைக் செய்திக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ள விலை விபரங்கள் அனைத்து  டெல்லி எக்ஸ்ஷோரூம் பட்டியல் ஆகும். 

Exit mobile version