Categories: Auto News

ரெடி-கோ காரின் வேரியண்ட் விபரம்

தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களின் புதிய மாடலாக டட்சன் ரெடி-கோ கார் ரூ.2.39 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் விலையை விட குறைவாக ரெடி-கோ காரின் விலை அமைந்துள்ளது.

datsun-redi-go-launched

க்விட் காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் க்விட் காரின் தோற்றத்தினை தழுவமால் ரெடி-கோ வித்தியாசமான தோற்றத்தினை பெற்று சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

54 hp  ஆற்றலை மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.

D , A , T , T (O) மற்றும் S என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் அமைந்துள்ள ரெடிகோ காரில் டாப் வேரியண்டாக S வேரியண்ட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ரெடி-கோ D  வேரியண்ட் (ரூ.2.39 லட்சம்)

 • டிரைவர் பக்க ஓஆர்விஎம்
 • கருப்பு ஸ்டீல் வீல்
 • முன்பக்க கண்ணாடிக்கு ஒற்றை வைப்பர்
 • பின்புற கதவுகளுக்கு சைல்ட் லாக்
 • மூன்று நட்சத்திர இருக்கை பட்டை அனைத்துக்கும்
 • ட்ரிப் மீட்டர்
 • எரிபொருள் அளவினை காட்டும் டிஸ்பிளே

ரெடி-கோ A வேரியண்ட (ரூ.2.83 லட்சம்)

ரெடி-கோ D  வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • பாடி வண்ணத்தில் பம்பர்கள்
 • பயணிகள் பக்க ஓஆர்விஎம்
 • ஏசி
 • க்ரோம் கிரில்
 • என்ஜின் இம்மொபைல்ஸர்
 • ஃபோல்டிங் வசதி கொண்ட பின் இருக்கைகள்
 • ஸ்டீல் வீல்
 • பவர் சாக்கெட்

ரெடி-கோ T வேரியண்ட (ரூ.2.83 லட்சம்)

ரெடி-கோ A  வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • பாடி வண்ணத்தில் கதவு கைப்பிடிகள்
 • பவர் ஸ்டீயரிங்
 • ஃபுல் வீல் கவர்
 • முன்பக்கத்தில் இரு ஸ்பீக்கர்கள்
 • மொபைல் டாக்கிங் ஸ்டேஷன்

ரெடி-கோ T (O) வேரியண்ட (ரூ.3.09 லட்சம்)

ரெடி-கோ T வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • முன்பக்க பவர் வின்டோஸ்
 • ஆடியோ சிஸ்டம் வசதியுடன் ரேடியோ , சிடி , எம்பி3 , யூஎஸ்பி தொடர்பு

source: www.automobiletamilan.com

ரெடி-கோ S வேரியண்ட (ரூ.3.43 லட்சம்)

ரெடி-கோ T (O) வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள்
 • ஓட்டுநருக்கான காற்றுப்பை

விற்பனையில் முன்னனி வகிக்கும் மாருதி ஆல்ட்டோ 800 காரை விட 32 சதவீதம் குறைவான பராமரிப்பு செலவினை கொண்ட மாடலாக ரெடி-கோ கார் விளங்கும். 2 வருட வாரண்டியுடன் வரையற்ற கிலோமீட்டருடன் கிடைக்கின்றது. ஈசி கிட் – ஸ்போர்ட் , ஈசி கிட் -பிரிமியம் , கூல் கிட் , அர்பன் கிட் மற்றும் ஸ்டைல் கிட் என மொத்தம் 5 வகையில் ரெடி கோ காருக்கு 50க்கு மேற்பட்ட துனை கருவிகள் வழங்குகின்றது. இதன் மூலம் ரியர் ஸ்பாய்லர்  , ரூஃப் ரெயில்கள் , ஸ்கிட் பிளேட் மேலும் பலவற்றை பெறலாம்.

மேலும் படிங்க ; க்விட் vs ரெடி-கோ கார் ஒப்பீடு

[envira-gallery id=”7303″]

Recent Posts

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி…

22 hours ago

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்…

1 day ago

டாடா கர்வ்.இவி ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்கள்

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு…

1 day ago

வரவிருக்கும் மாருதி சுசூகியின் 2024 டிசையர் பற்றி சில முக்கிய விபரங்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற…

1 day ago

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி…

2 days ago

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை…

2 days ago