Auto News

வோடோஃபோன் நிறுவனத்துடன் மஹிந்திரா e2o கார்

வோடோஃபோன் நிறுவனம் மஹிந்திரா e2o காரின் மொபைல் தொடர்பான சேவைகளுக்கு இனைந்துள்ளது. வோடோஃபோன் பிஸ்னஸ் சர்விஸ் மற்றும் மஹிந்திரா ரேவா இனைந்து ஸ்மார்ட்போன்களுக்கான மஹிந்திரா e2o கார் தொடர்பான சேவைகளை வழங்கும்.
இந்த சேவையானது மஹிந்திரா e2o காரின் பேட்டரி கையிருப்பு, ஏசி போன்றவற்றை கன்ட்ரோல் செய்யவும்,  மேலும் எங்கிருந்து வேண்டுமானாலும் கார் கதவுகளை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும் உங்கள் மொபைல் மூலம். மேலும் அருகில் உள்ள சார்ஜ் ஸ்டேசன் மற்றும் அவசரகாலத்தில் மொபைலை இனைப்பாக பயன்படுத்தி 8 முதல் 10 கிமீ வரை பயணிக்க உதவும் தொழில்நுடபம் ரேவாஇவ். என பலதரபட்ட சேவைகளை மொபைல் மூலம் வழங்கும்.
இந்த நுட்பத்திற்க்கான பெயர் மெஷின் டூ மெஷின் ஆகும். ஆண்டிற்க்கு 6000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு வெளிநாடுகளுக்கும் ரேவா e2o காரினை எற்றுமதி செய்யவும் உள்ளது.
மஹிந்திரா e2o பற்றி படிக்க
Share
Published by
MR.Durai
Tags: e2oMahindra