Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் வருகை எப்பொழுது

ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரர் பைக்கினை ராயல் என்ஃபீல்டு உற்பத்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் நவம்பர் இறுதியிலோ அல்லது ஆட்டோ எக்ஸ்போ 2016யில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஹிமாலயன் பைக்கில் 27ஹெச்பி ஆற்றல் மற்றும் 32என்எம் டார்க் வழங்கும் 410சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இங்கிலாந்தின் ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் நிறுவனத்தின் டபுள் க்ரடல் ஃபிரேமில் என்ஜின் பொருத்தபட்டிருக்கும். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோசாக் அப்சார்பரினை பெற்றிருக்கும். முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக்குகளை பெற்றிருக்கும்.

இரண்டு வேரியண்ட்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் வரலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது. அவை அட்வென்ச்சர் டூரர் மற்றும் ஸ்டீரிட் ஃபைட்டர் வகையாகும்.

  • அட்வென்ச்சர் வகையில் மிக உயரமான முன்பக்க மக்கார்டு , கருப்பு நிற வண்ணத்தில் விளங்கும்.
  • சாதரன ஸ்டீரிட் வேரியண்டில் குரோம் பூச்சூடன் முன்பக்க மக்கார்டு தாழ்வாக இருக்கும்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விலை ரூ.1.70 லட்சம் முதல் ரூ. 2 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

Exit mobile version