ஹீரோ டூயட் & மேஸ்ட்ரோ எட்ஜ் செப்டம்பர் 29 முதல்

வரும் செப் 29ந் தேதி ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் என்கிற பெயரில் இரண்டு புதிய  ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு கொண்டு வருகின்றது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

மிக நேர்த்தியான வடிவத்தில் சிறப்பான வசதிகளுடன் வரவுள்ள டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ்  ஸ்கூட்டர்கள் ஹீரோவின் ஸ்கூட்டர் சந்தை ஆதிக்கத்தை அதிகரிக்க உதவும்.

ஹீரோ டூயட் ஸ்கூட்டர்

ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் இரண்டு விதமான வேரியண்ட்களில் பல விதமான நவீன வசதிகளான மொபைல் சார்ஜிங் போர்ட் , இருக்கை அடியில் உள்ள லக்கேஜ்க்கான விளக்கு , பின்புற லக்கேஜ் ஹூக் போன்றவை டாப் VX வேரியண்டில் நிரந்தர அம்சமாக உள்ளது. LX பேஸ் வேரியண்டில் துனைகருவிகளாக பெற்று கொள்ளலாம்.
டூயட் ஸ்கூட்டரில் 110.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 8.30என்எம் ஆகும். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் சாக் அப்சார்பர்களை பெற இயலும். டீயூப்லஸ் டயர் மற்றும் இன்கிரேட்டடு பிரேக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக பெற இயலும். டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் சர்வீஸ் ரிமைன்டரை பெற இயலும்.
சிவப்பு , வெள்ளை ,  மேட் கிரே ,கருப்பு , பச்சை மற்றும் கிரேஸ் கிரே என மொத்தம் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
ஹீரோ டூயட் ஸ்கூட்டர் விலை ரூ. 48,500 முதல் ரூ.50,000 வரையிலான விலையில் விற்பனைக்கு  வரலாம். ஆக்டிவா ஐ , வீகோ போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்  110.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 8.30என்எம் ஆகும். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் சாக் அப்சார்பர்களை பெற இயலும். டீயூப்லஸ் டயர் , எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் இன்கிரேட்டடு பிரேக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக பெற இயலும். 
மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் இரண்டு விதமான வேரியண்ட்களில் பல விதமான நவீன வசதிகளான மொபைல் சார்ஜிங் போர்ட் , இருக்கை அடியில் உள்ள லக்கேஜ்க்கான விளக்கு , பின்புற லக்கேஜ் ஹூக்   டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் சர்வீஸ் ரிமைன்டரை போன்றவை டாப் VX வேரியண்டில் நிரந்தர அம்சமாக உள்ளது. LX பேஸ் வேரியண்டில் துனைகருவிகளாக பெற்று கொள்ளலாம்.
சிவப்பு , சில்வர் வெள்ளை ,  மேட் கிரே ,கருப்பு , டெக்னோ நீலம் , நைட் ஸ்டார் மற்றும் மேட் நீலம் என மொத்தம் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விலை ரூ. 54,500 முதல் ரூ.59,000 வரையிலான விலையில் விற்பனைக்கு  வரலாம். ஆக்டிவா  , ஜூபிடர் போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.
Hero Maestro Edge and Duet to launch on September 29 , 2015
Exit mobile version