ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து விற்பனை சாதனை

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்(HMCL) விற்பனையில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றது. கடந்த ஜனவரி மாதத்தின் விற்பனை விவரங்களை கானலாம்.
கடந்த மாதம் 5,57,797 வாகனங்களை விற்றுள்ளது. இது  ஓரு மாதத்திலே ஹீரோ நிறுவனத்தின் அதிகப்பட்ச விற்பனையாகும். கடந்த ஆண்டு 2012 மே மாதத்தில் 5,56,644 வாகனங்களை விற்றள்ளது.அதனை ஜனவரி மாதத்தில் முறியடித்துள்ளது.

கடந்த ஜனவரி 2012 மாதத்தை விட இந்த வருடம் 7.21% அதிகமாகும். கடந்த 2012 ஜனவரியில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 5,20,272 ஆகும்.

`ஹீரோ ஸ்ப்ளன்டர் மற்றும் பேஷன் பைக்களே அதிகம் விற்பனை ஆகியுள்ளது. மேலும் புதிய இக்னைட்ர் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது.ஸ்கூட்டர்களில் ப்ளஸ்ர் மற்றும் மேஸ்டீரோ அதிகம் விற்றுள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் உலகத்தரமான பாகங்களை தயாரிக்க 4வது உற்பத்தி ஆலையை சுமார் 550 கோடி செலவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கி வருகின்றது.

Exit mobile version