ஹூண்டாய் க்ரெட்டா உற்பத்தி மேலும் அதிகரிப்பு

எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை விட அதிகப்படியான முன்பதிவினை பெற்றுள்ள ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தியை மாதம் 12,500 கார்களாக ஹூண்டாய் மோட்டார்ஸ் அதிகரித்துள்ளது.

6000 கார்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்னைக்கப்பட்ட இருந்த நிலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 6 மாதங்களிலே 90,000 முன்பதிவுகளை கடந்ததால் காத்திருப்பு காலம் சராசரியாக அனைத்து டீலர்களிடமும் 3 மாதம் வரை உள்ளதால் இதனை குறைக்கும் நோக்கில் தற்பொழுது 10,000 கார்கள் மாதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய சந்தையில் 7000 கார்களும் வெளிநாடுகளில் 2000 முதல் 3000 கார்கள் வரை க்ரெட்டா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே காத்திருப்பு காலத்தினை குறைக்கும் நோக்கத்தில் மாதம் 12,500 கார்களாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 10,000 கார்கள் வரை இந்திய சந்தைக்கும் மற்ற கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

க்ரெட்டா என்ஜின் விபரம்

120 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 155 Nm ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.29கிமீ ஆகும்.

87 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220 Nm ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும்.

125 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259 Nm ஆகும் . இதன் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.67கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.01கிமீ ஆகும்.

காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் சிறப்பான மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா வலம் வருகின்றது. 2016 இந்தியாவின் சிறந்த கார் என்ற பட்டத்தினை க்ரெட்டா பெற்றுள்ளது.

Share