ஹோண்டா அமேஸ் விலை விபரம்

ஹோண்டா நிறுவனத்தின் மிக பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான ஹோண்டா அமேஸ் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றது. ரூ 4.99 இலட்சத்தில் இருந்து 7.60 இலட்சம் வரை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹோண்டா அமேஸ் செடான் இந்தியாவின் குடும்ப காராக வலம்வரும் என ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சேர்த்து 10 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றில் 4 டீசல் வேரியண்ட் மற்றும் 6 பெட்ரோல் வேரியண்ட் கிடைக்கும்.

honda amaze

ஹோண்டா அமேஸ் டீசல் எஞ்சின்

ஹோண்டா அமேஸ் டீசல் எஞ்சின் 1.5 லிட்டர் i-DTEC எர்த்டீரிம்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டீசல் எஞ்சின் 98.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 200 என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் எஞ்சின்

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் எஞ்சின் 1.2 லிட்டர் i-VTEC எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் ஹோண்டா பிரியோ காரில் பயன்படுத்தப்பட்டது. பெட்ரோல் எஞ்சின் 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 109 என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கும்.
ஹோண்டா அமேஸ் விலை பட்டியல்(தில்லி விலை)

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் விலை

பெட்ரோல் மேனுவல்

இ: ரூ 4.99 லட்சம்
இஎக்ஸ் : ரூ 5.24 லட்சம்
எஸ்: ரூ 5.62 லட்சம்
விஎக்ஸ்: ரூ 6.60 லட்சம்

பெட்ரோல் ஆட்டோமேட்டிக்

 எஸ்: ரூ 6.62 லட்சம்
 விஎக்ஸ்: ரூ 7.50 லட்சம்.

டீசல்
இ: ரூ 5.99 லட்சம்
இஎக்ஸ் : Rs 6.24 லட்சம்
 எஸ்: Rs 6.67 லட்சம்
விஎக்ஸ்: Rs 7.60லட்சம்

ஹோண்டா அமேஸ் கார் சிறப்புகள் அறிய படிக்க

Exit mobile version