ஹோண்டா அமேஸ் 2 லட்சம் கார்கள் விற்பனை சாதனை

கடந்த 2013 ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா அமேஸ் கார் 2 லட்சம் என்ற விற்பனை இலக்கினை கடந்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் டீசல் கார் மாடலாக இந்திய சந்தையில் அமேஸ் அறிமும் செய்யப்பட்டது.

அமேஸ் கார் என்ஜின்

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின் ஆப்ஷனில் வெளிவந்த அமேஸ் காரில் பெட்ரோல் மாடலை சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 88PS ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 109Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 100PS ஆற்றல் மற்றும் 200Nm இழுவைதிறன் வெளிப்படுத்தும்.  இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சில மாறுதல்களை பெற்ற புதிய ஹோண்டா அமேஸ் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேஸ் செடான் காரின் போட்டியாளர்கள் டிசையர் , புதிய அமியோ , எக்ஸ்சென்ட் , டாடா ஸெஸ்ட் , எட்டியோஸ் போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வெற்றிகரமாக 2,00,000 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய தொடக்கநிலை செடான் கார்களில் பெரிய வரவேற்பினை அளித்துள்ளனர். மேலும் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை அமேஸ் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக ஹோண்டா இந்தியா பிரிவு மூத்த துனை தலைவர் திரு.ஜெனேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Share