Auto News

ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 முடிவுக்கு வந்தது

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான சிபி யூனிகாரன் 150சிசி மாடலினை தனது இணையத்தில் இருந்து ஹோண்டா நீக்கிவிட்டது. புதிய சிபி யூனிகார்ன் 160 வரவால் பழைய யூனிகாரன் முடிவுக்கு வந்தது.
புதிய ஹோண்டா சிபி யூனிகார்ன் 160

கடந்த 2005ம் ஆண்டு முதல் சந்தையில் இருந்த சிபி யூனிகார்ன் 150 நல்ல வரவேற்பினை பெற்ற மாடலாக சிறப்பான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்துவந்தது. 2014ம் ஆண்டின் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வந்த புதிய சிபி யூனிகார்ன் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

புதிய சிபி யூனிகார்ன் 160 பைக்கில் 160சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14.5பிஎச்பி மற்றும் டார்க் 14.61 ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 106 கிமீ ஆகும். எச்இடி நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள யூனிகார்ன் என்ஜின் லிட்டருக்கு 62கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

முழு விபரம் அறிய ; ஹோண்டா சிபி யூனிகார்ன் 160

யூனிகாரன் 150 பைக்கிற்க்கு ரூ.7000 முதல் 15000 வரை சலுகை வழங்கப்படுகின்றது.

Honda India discontinues CB Unicorn 150

Share
Published by
MR.Durai
Tags: Honda