ஹோண்டா BR-V காம்பேக்ட் எஸ்யுவி வெளியானது

புதிய ஹோண்டா BR-V காம்பேக்ட் எஸ்யுவி காரின் அதிகார்வப்பூர்வ படங்கள் வெளிவந்துள்ளது. 7 இருக்கை கொண்ட பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யுவி பிரியோ , அமேஸ் மற்றும் மொபிலியோ தளத்தில் உருவாக்கப்பட உள்ளது.
ஹோண்டா BR-V காம்பேக்ட் எஸ்யுவி

அமேஸ் , மொபிலியோ கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதே டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  மிக சிறப்பான தோற்றத்தினை வழங்கும் வகையில் குரோம் பட்டை கொண்ட கிரில் மத்தியில் ஹோண்டா இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது.

பெரிதான தோற்றத்தினை வழங்கும் வகையில் கருப்பு நிற கிளாடிங் மற்றும் வீல் ஆர்சினை கொண்டுள்ளது. முகப்பில் புராஜெக்டர் விளக்குள் , பகல் நேர எல்இடி விளக்குகள் , பனி விளக்குகள் ,  பின்புறத்தில் நேர்த்தியான டிசைன் எல்இடி டெயில் விளக்குகள் பெற்றிருக்கும்.

117பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 96.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனிலும் மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் என இரண்டிலும் வரவுள்ளது. வரும் 20 ஆகஸ்ட் 2015 நடைபெறவுள்ள இந்தோனேசியா ஆட்டோ கண்காட்சியில் காட்சிக்கு வரவுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வரவுள்ளது.

ஹோண்டா BR-V காம்பேக்ட் எஸ்யூவி
Honda BR-V Design Sketch Unveiled

Share
Tags: BR-VHondaSUV