Automobile Tamil

ஃபோர்ட் சர்வீஸ் கால்குலேட்டர் அறிமுகம்

இந்திய ஃபோர்ட் நிறுவனம் சர்வீஸ் செலவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் சர்வீஸ் கால்குலேட்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பராமரிப்பு செலவுகளை எளிதாக அறிந்து கொள்ளமுடியும்.

Ford Endeavour SUV 1

ஆஸ்பயர் , கிளாசிக் , இக்கோஸ்போர்ட் , ஃபிகோ , ஃபீஸ்டா , என்டெவர் மற்றும் ஐகான் என ஃபோர்டு நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் சர்வீஸ் பராமரிப்பு செலவுகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சர்வீஸ் பிரைஸ் பிராமிஸ் என்ற பெயரில் ஃபோர்டு நிறுவனத்தின் சர்வீஸ் சேவைகளில் இந்த புதிய சர்வீஸ் செலவு கால்குலேட்டர் இணைக்கப்பட்டுள்ளது. குறிபிட்ட கால இடைவெளியில் எவ்வளவு கிமீ சர்வீஸ் சார்ஜ் பொருட்கள் மாற்ற வேண்டியது என்ன எவ்வளவு கட்டனம் , லேபர் சார்ஜ், வரிகள் உள்பட இதில் தெரிந்து கொள்ள இயலும்.

நாடுமுழுதும் உள்ள அனைத்து டீலர்களிடமும் உள்ள சர்வீஸ் செலவினை அறிந்து கொள்ள முடியும் என்பதனால் வாடிக்கையாளர்கள் பெரிது ம் பயனடேவார்கள் என ஃபோர்டு கருதுகின்றது.

இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள ; ஃபோர்ட் சர்வீஸ் கார்குலேட்டர்

 

Exit mobile version