Automobile Tamil

இந்தியாவில் 3.23 லட்சம் கார்கள் திரும்ப அழைக்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம்

ஃபோக்ஸ்வேகன் குழுமம் மாசு உமிழ்வு மோசடியால் உலக அளவில் பல லட்சம் கார்களை திரும்ப அழைக்கின்றது. அந்த வரிசையில் இந்தியாவில் 3.23 லட்சம் கார்கள் திரும்ப அழைக்க உள்ளது. இதில் ஆடி மற்றும் ஸ்கோடா கார்களும் அடங்கும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

மாசு உமிழ்வு மோசடியால் உலக முழுதும் பல லட்ச கார்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் , ஸ்கோடா மற்றும் ஆடி போன்ற நிறுவன கார்களில் உமிழ்வு பிரச்சனை உள்ளதை சரிசெய்ய உள்ளது.

EA189 என்ஜின்களான  1.2 லிட்டர் , 1.5 லிட்டர , 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள மாடல்களில் மாசு பிரச்சனை உள்ளது.

பாதிக்கப்பட வாகனங்களை சரி செய்வதற்க்கான ஆய்வு அறிக்கையை மத்திய அரசின் கனரக தொழிற்துறை அமைச்சகம் மற்றும் ஆராய் (ARAI -Automotive Research Association of India ) அமைப்பிலும் தாக்கல் செய்துள்ளது. மத்திய அமைச்சகத்தின் அனுமதிக்கு பின்னர் உடனடியாக பாதிப்பில் உள்ள கார்களை திரும்ப அழைக்க உள்ளது.

உலக அளவில் மாசு உமிழ்வு மோசடியால் 11 மில்லியன் கார்களை திரும்ப அழைக்கின்றது. வெளிநாடுகளில் சுமார் 1 மணி நேரத்திற்க்குள் சாஃப்ட்வேர் மற்றும் டெக்கனிக்கல் பிரச்சனைகளை இலவசமாக சரி செய்யப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட கார்களுக்கு இலவசமாக சரி செய்து கூடுதலாக நஷ்ட ஈடாக $1000 (ரூ.66,500) தருகின்றனர். ஆனால் இந்தியாவில் அது போன்ற முறை இல்லை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை விரைவில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் தொடர்பு கொள்ளும்.

Exit mobile version