Automobile Tamil

இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் தீபாவளி வருகை

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் பெட்ரோல் மாடல் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வரலாம் என்ற செய்தினை வணிக பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

toyota-innova-crysta-seats

டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட டீசல் என்ஜின்கள் கடந்த 5 மாதங்களாக விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த மஹிந்திரா , டாடா ,  டொயோட்டா மேலும் பல சொகுசு பிராண்டின் விற்பனை டெல்லியில் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களில் அதிரடியாக என்ஜின் சிசியினை குறைத்து 1.99 லிட்டர் என்ஜின் மாடல்களை டெல்லிக்கு அறிமுகம் செய்தது. மேலும் டாடா நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் டொயோட்டா நிறுவனம் இதில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.

தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா க்ரீஸ்டா காரில் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களை மட்டுமே வெளியிட்டு பெட்ரோல் இன்னோவா பற்றி எந்த தகவலினையும் வெளியிடவில்லை.

ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையத்துக்கு பேட்டி அளித்துள்ள டொயோட்டா இயக்குநர் மற்றும் மூத்த தலைமைத் துணை தலைவர் (விற்பனை மற்றும் விளம்பரபடுத்துல்) திரு. N. ராஜா அவர்கள் தெரிவிக்கையில்

டொயோட்டா ஜப்பான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட க்ரிஸ்டா இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என கூறியுள்ளார்.

ஆனால் ஆட்டோமொபைல் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்ட என்ஜின் தற்பொழுது இந்தோனேசியா சந்தையில் உள்ள 2.0 லிட்டர் என்ஜின் மாடலாகும். மத்திய கிழக்கு நாடுகளில் சக்திவாய்ந்த 2.7 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் படிங்க ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா முழுவிபரம்

இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடல் மிகுந்த திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த மாடலாக விளங்க உள்ளது.

உதவி ; [ Financial Express ]

 

Exit mobile version