Site icon Automobile Tamilan

உலகின் மிக வேகமான டிரக் : வால்வோ தி ஐயன் நைட்

உலகின் மிக வேகமான டிரக் என்ற பட்டத்தை வால்வோ தி ஐயன் நைட் டிரக் பெற்று சாதனை படைத்துள்ளது. வால்வோ தி ஐயன் நைட் டிரக் உச்ச வேகம் ஒரு மணி நேரத்துக்கு 276 கிலோமீட்டர் ஆகும்.

2400 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த 13 லிட்டர் D13 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 6000 Nm வரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும். இதில் ஐ ஷிஃப்ட் டியூவல் கிளட்ச் (I-Shift Dual Clutch) டிரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் 500 மீட்டர் மற்றும் 1000மீட்டர் என இரண்டிலும் புதிய சாதனைகளை படைத்துள்ள வால்வோ தி ஐயன் நைட் டிரக்கில் நின்றடத்திலிருந்து 1000 மீட்டர் தூரத்தை சராசரியாக மணிக்கு 169 கிமீ வேகத்தில் 21.29 விநாடிகளில்  எட்டியுள்ளது. 500 மீட்டர் மீட்டர் தூரத்தை சராசரியாக மணிக்கு 131.29 கிமீ வேகத்தில் 13.71 விநாடிகளில்  எட்டியுள்ளது.

வால்வோ லாரிகளின் முந்தைய சாதனைகள்

வால்வோ தி ஐயன் நைட் டிரக் சிறப்புகள்

வட ஸ்விடனில் அமைந்துள்ள டெஸ்ட் டிராகில் இந்த உலக சாதனையை படைத்துள்ளது.

உலகின் மிக வேகமான டிரக் சாதனையை வால்வோ தி ஐயன் நைட் டிரக் நிகழ்த்தியுள்ள வீடியோ மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

[youtube https://www.youtube.com/watch?v=EIQsQ4FKUqs]

Exit mobile version