Automobile Tamilan

ஏபிஎஸ் பிரேக் அவசியம் என்ன ?

ஏபிஎஸ் பிரேக் என்றால் என்ன, ஏபிஎஸ் ஏன் மிக முக்கியம், ஏபிஎஸ் எதனால் அவசியம், ஏபிஎஸ் நன்மைகள் என்ன  இவ்வாறு பல கேள்விகளுக்கான விடையை இந்த பகிர்வில் கானலாம்.ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களில் மிக அவசியமான ஒன்று.
  1. 1929 ஆம் ஆண்டில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு உருவாக தொடங்கியது. ஆரம்ப காலங்களில் விமானங்களில் பயன்படுத்தப்பட்டன. 1958 ஆம் தொடங்கி பல மாற்றங்களுடன் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என பயன்பாட்டிற்க்கு வந்தது.

    ஏபிஎஸ் என்றால் என்ன ?

    ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்(Anti lock braking system) என்பதன் சுருக்கமே ஏபிஎஸ்(ABS) ஆகும். ஏபிஎஸ் மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தி வாகனத்தை சரியான இடத்தில் நிற்க உதவுவதுடன் வளைவுகளில் சிறப்பான முறையில் வாகனத்தை கையாள இயலும்.

    ஏபிஎஸ் இயக்கம்

    ஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. அதனால் சரியாக செயல்படும். பிரேக் பிடித்தவுடன் முழுமையாக சக்கரங்களை தாக்காது. ஆனால் சக்கரங்களை விட்டு விட்டு பிடிக்கும் இதனால் வேகம் இயல்பான கட்டுபாட்டுக்குள் வரும்.

    ஏபிஎஸ் நன்மைகள்…

    1. திடீரென பிரேக் பிடிக்கும் பொழுது வாகனம் நிலை தடுமாறு சாதாரன பிரேக்கில்.. ஆனால் ஏபிஎஸ் பயனபடுத்தப்பட்ட வாகனம் நிலை தடுமாறுவது தடுக்கப்படும்.

    2. மழை காலங்களில் ஈரமான சாலைகள் மற்றும் சறுக்கலான சாலைகளிலும்  இயல்பாக பயணிக்க உதவும்.

    3. நாம் எங்கு நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கு சரியாக நிறுத்த முடியும்.

    4. சாதாரன பிரேக்கை விட அதற்க்கு முன்பான தூரத்திலே வாகனத்தை நிறுத்திவிடலாம்.

    5. வளைவுகளில் இயல்பாக வாகனத்தை இயக்க முடியும்.

    பாதுகாப்பான பயணத்திற்க்கு மிக பெரும் பங்கு வகிக்கின்றது. புதிய கார் வாங்க விரும்புபவர்கள் ஏபிஎஸ் உள்ள வாகனத்தை முயற்சி செய்யுங்கள். பரவலாக அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ் அடிப்படையாக சேர்க்கப்பட்டு வருகின்றது.

நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஆட்டோமொபைல் குறிப்புகள் தகவல்களை பகிர்ந்து கொள்ள admin @automobiletamilan.com
Exit mobile version