Site icon Automobile Tamilan

கார் உரிமையாளர் vs சர்வீஸ் சென்டர்

சென்னை மழை வெள்ளத்தால் வாகன உரிமையாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல சர்வீஸ் சென்டர்களில் போதுமான இடவசதி இல்லாமாலும் சர்வீஸ் சென்டரில் இருந்த கார்களும் நீரில் மூழ்கியிருப்பதனால் பல உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

30,000க்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னை மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியதாக கூறப்பட்டு வரும் நிலையில் கார்களின் எண்ணிக்கை மட்டும் 15,000 வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருசக்கர வாகனம் முதல் வர்த்தக வாகனங்கள் வரை கனக்கிட்டால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

தினறும் சர்வீஸ் சென்டர்

பெரும்பாலான கார்கள் சர்வீஸ் சென்ட்ர்களுக்கு வந்து சேர தொடங்கியுள்ளதாம் . இதனால் போதுமான இடவசதி பற்றாக்குறையால் பல கார் சேவை மையங்கள் தினறி வருகின்றது. மேலும் சென்னை புறநகர பகுதிகளில் உள்ள சில சர்வீஸ் சென்ட்ர்கள் நீரில் மூழ்கியுள்ளதாம். இவற்றில் இருந்த கார்களும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் வெளிமாநிலங்களில் இருந்து பனியாளர்களை சென்னைக்கு அனுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ் சென்ட்ர் மட்ட்மல்லாமல் பல இடங்களில் முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் என்பதனால் உடனடியாக பராமரிப்பு பனியை மேற்கொள்வது மிக அவசியமானதாகும். பல இடங்களில் கார்களை சர்வீஸ் செய்ய 10 நாட்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Exit mobile version