Automobile Tamilan

சென்னை மழை : ஆட்டோமொபைல் நிறுவனங்ளும்

சென்னை மழை பாதிப்புகளால் எண்ணற்ற சிறு குறு தொழில் முதல் கார்ப்ரெட் நிறுவனங்கள் வரை சென்னை மழை யால் முடங்கியது. சென்னை மழை ஆபத்துகள் குறைந்துள்ள நிலையில் மீண்டும் சென்னை புத்துயிர் பெற தொடங்கியுள்ளது.

Hyundai-donates-Rs-5-cr-to-Chennai-rains

பருவநிலை மாற்றங்களால் முறையற்ற மழை அளவு , அதிகப்படியான வெப்பம் போன்றவை தொடர் வாடிக்கையாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரான சென்னை எண்ணற்ற சிறு , குறு உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலை முதல் உலக நிறுவனங்களான பிஎம்டபிள்யூ , டெய்மலர் , ரெனோ – நிசான் ஃபோர்டு , ஹூண்டாய் , ஐஷர் ராயல் என்ஃபீல்டு போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.

சென்னை மழை பாதிப்புகளால் பல  நிறுவனஙகள் சில வாரங்களாக இயங்காமல் உள்ளது. இந்தியாவின் பிரபலமான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி இழப்பு மட்டும் 11200 பைக்குகள் ஆகும்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் 1 முதல் 6 வரை செயல்படவில்லை. இதனால் முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.

ரெனோ நிறுவனத்தின் புதிய க்விட் கார் அபரிதமான வரவேற்புடன் 70,000 முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில் இந்த காரின் காத்திருப்பு காலம் தற்பொழுது 10 மாதம் வரை அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னை மழையால் மேலும் அதிகரிக்கும்.

 

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டாரஸ் நிறுவனமும் உற்பத்தி இழப்பினை சந்தித்துள்ளது. மேலும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்று சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.2 கோடி நிதியை முதல்வரிடம் தந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் எட்டிகுத்திமேடு , கூடுவாஞ்சேரி , கேகே நகர் , அக்கமாபுரம் மற்றும் வெள்ளாரை போன்ற பகுதிகளில் 1000 பெட்ஜெட் , 500 தார்பாய்கள் , 1000 மேட் மற்றும் உணவு , பிஸ்கட் போன்றவற்றை வழங்கியுள்ளது.

சென்னை மழையால் 15,000 கார்களுக்கு பக்கமாக நீரில் மூழ்கியுள்ளது. இந்த கார்களை மறுசீரமைப்பு செய்ய சர்வீஸ் சென்டர்கள் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. மாருதி சுசூகி நிறுவனம் மற்ற மாநிலங்களில் இருந்து 150க்கு மேற்பட்ட பணியார்களை அனுப்பியுள்ளது. இதில் மாருதி நிறுவனத்தின் கார்கள் மட்டும் 5000 தான்டலாம். மேலும் ஹூண்டாய் , ஹேண்டா போன்ற நிறுவனங்களும் சிறப்பான முறையால் செயல்பட்டு வருகின்றது.

மொத்தமாக 30,000 வாகனங்கள் மழை வெள்ளத்தால் பாதிகப்பட்டிருக்கலாம் என காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  என்ஜினில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.5.00 லட்சம் வரை செலவாகலாம்.

பல காப்பீடு நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட கிளைம்களை பெற்றுள்ளதாம். மொத்தமாக சென்னை மழை வெள்ளதால் பாதிக்கப்பட வாகனங்களுக்கு கிளைம் ரூ.3000 கோடியை எட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

chennai rains
Exit mobile version