Site icon Automobile Tamilan

ஜாகுவார் F பேஸ் எஸ்யூவி டீசர் வீடியோ

ஜாகுவார் நிறுவனத்தின் முதல் F பேஸ்  கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடல் வரும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள நிலையில் F பேஸ் எஸ்யூவி படம் மற்றும் வீடியோ வெளிவந்துள்ளது.
ஜாகுவார் F பேஸ் எஸ்யூவி
வரும் செப்டம்பர் 15ந் தேதி தொடங்க உள்ள பிராங்பேர்ட ஆட்டோ ஷோவில் 60க்கு மேற்பட்ட கான்செபட் மற்றும் உற்பத்தி மாடல்கள் பார்வைக்கு வரவுள்ளது.
ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் சொகுசு தன்மைகளுடன் விளங்கும். கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாகுவார் CX-17 கான்செபட்டின் அடிப்படையில் தான் எஃப் பேஸ் உருவாகி உள்ளது.
எஃப் டைப் காரில் இருந்த ஸ்டீயரிங்கை பெற்றுள்ள எஃப் பேஸ் காரில் 5.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.புது விதமான கேபின் மிக அழகாக அமைந்திருக்கலாம்.
வரும் செப்டம்பர் 15ந் தேதி பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் முழுவிபரம் வெளிவரும்.

ஜாகுவார் எஃப் பேஸ் வீடியோ டீசர்

    

Exit mobile version