Site icon Automobile Tamilan

நிசான் , டட்சன் கார்களுக்கு மை டிவிஎஸ் சர்வீஸ்

நிசான் மற்றும் டட்சன் கார்களுக்கு சர்வீஸ் சென்ட்ரகளை அதிகரிக்கும் நோக்கில் மை டிவிஎஸ் மல்டி பிராண்டு சர்வீஸ் மையத்துடன் இணைந்து செயல்பட நிசான் நிறுவனம் புதிய இணைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டிவிஎஸ் குழுமத்தின் மை டிவிஎஸ் என்ற பெயரிலான மல்டி பிராண்டு கார் சர்வீஸ் செண்டர்கள் வாயிலாக அங்கிகரிப்பட்ட நிசான் சர்வீஸ் பாயின்ட் ( Nissan Authorised Service Points – NASP) என்ற பெயரில் அலுவல் ரிதியாக நிசான் தொடங்கியுள்ளது.

முற்கட்டமாக தமிழகத்தில் 8 இடங்களில் தொடங்கப்பட உள்ள நிசான் மற்றும் டட்சன் கார் சர்வீஸ் சேவைகள் அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் 23 மையங்கள் செயல்பட உள்ளது. மேலும் எத்தனை மையங்கள் என்ற உறுதியான தகவல் எதனையும் நிசான் வெளியிடவில்லை. நிசான் நிறுவனம் நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் கார்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் 220 டீலர்களை நாடு முழுவதும் கொண்டுள்ளது. வருகின்ற 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 300 டீலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் ரெடி-கோ காருக்கு நல்ல வரவேற்பினை கிடைத்துள்ள நிலையில் போதுமான வகையில் டீவர்கள் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கினை அதிகரிக்கவே இந்த முடிவினை நிசான் எடுத்துள்ளது. நிசான் மற்றும் டட்சன் கார்களின் ஒரிஜனல் உதிரிபாகங்களே இந்த சேவையில் கிடைக்கும்.

Exit mobile version