Site icon Automobile Tamilan

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் இணையம் செயல்பட துவங்கியது

இந்தியாவின் டிவிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் அலுவல் இணையதளம் நேற்றுமுதல் செயல்பட துவங்கி உள்ள நிலையில் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இந்தியாவின் பக்கம் இடம்பெறவில்லை.

ஓசூரில் அமைந்துள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் ஜி310 ஆர் பைக் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள நிலையில் பல வெளிநாடுகளுக்கு இந்தியாவினை மையமாக கொண்டு ஏற்றுமதி செய்ய பிஎம்டபிள்யூ மோட்டார்டு – டிவிஎஸ் மோட்டார்ஸ் இணைந்து செயல்பட துவங்கியுள்ளது.

ஜி310 ஆர் பைக்கில் 34 PS @9500rpm ஆற்றலை வெளிப்படுத்தும் 313சிசி ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் எனப்படும் டார்க் 28Nm @ 7500rpm ஆகும்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் இணைந்த ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யு ஜி310 ஆர் பைக்   உச்சவேகம்  1 மணி நேரத்துக்கு 143 கிலோமீட்டர் ஆகும்.

வருகின்ற அக்டோபர் ,2016யில் இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version