Automobile Tamilan

மஹிந்திரா கேயூவி 100 என்ஜின் விபரம்

மஹிந்திரா கேயூவி100 காரில் புதிய எம் ஃபால்கன் வரிசை என்ஜினை அறிமுகம் செய்துள்ளது. கேயூவி 100 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

எம் ஃபால்கான் என்ஜின்

புதிய எம் ஃபால்கான் என்ஜின் பற்றி பவன் குன்கா தெரிவிக்கையில் 4 வருடங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்த புதிய என்ஜின் தயாரிப்பு டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ள டீசல் கார்களின் தடைக்கு மத்தியிலே பெட்ரோல் என்ஜின் விற்பனைக்கு வருவது எதிர்பாராத ஒன்று என குறிப்பிட்டிருந்தார்.

எம் ஹாக் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம் ஃபால்கன் என்ஜின் வரிசையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் உருவாக்கபட்டுள்ளன. மேலும் இதுதவிர இரண்டு சீரிஸ் என்ஜின்களை மஹிந்திரா உருவாக்கி வருகின்றது என தெரிவித்தார்.

எம் ஃபால்கான் சீரிஸ்

  1. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் சீரிஸ் ( கேயூவி100 )
  2. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் சீரிஸ் (தயாரிப்பு நிலை)
  3. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் சீரிஸ் ( மஹிந்திரா சாங்யாங் டிவோலி )

கேயூவி 100 என்ஜின்

எம் ஃபால்கான் G80

அலுமினிய என்ஜின் பிளாக்கால் உருவாக்கப்பட்டுள்ள ஜி80 பெட்ரோல் என்ஜினில் இரட்டை விவிடி யால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைவான என்ஜின் உராய்வு மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தைடியதாக விளங்கும்.

மகிந்திரா கேயூவி 100 காரில் 82 பிஹெச்பி @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198சிசி எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 என்எம் 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

எம் ஃபால்கான் D75

புதிய தலைமுறை டர்போசார்ஜர் பொருத்தப்பட்டுள்ள எம் ஃபால்கான் டி75 என்ஜின் குறைவான உராய்வு மற்றும் சிறப்பான ஆற்றலை வழங்கும் தனமை கொண்டதாகும்.

மகிந்திரா கேயூவி 100 காரில் 77 பிஹெச்பி @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198சிசி எம் ஃபால்கான் D75 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 என்எம் 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

இன்று முதல் மகிந்திரா கேயூவி100 எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி 15, 2016 விற்பனைக்கு வருகின்றது.

Exit mobile version