Automobile Tamilan

மாருதி சுஸூகி எஸ்யுவி எப்பொழுது

மாருதி சுஸூகி நிறுவனத்தின் புதிய காம்பேகட் எஸ்யுவி காரை தயாரிக்கும் முயற்சியில் தீவரமாக உள்ளது. வளர்ந்து வரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுடன் போட்டியிட ஏதுவாக இந்த புதிய மாருதி எஸ்யுவி விளங்கும்.

மாருதி எஸ்யுவி
மாருதி எஸ்யுவி கான்செப்ட்

எஸ் க்ராஸ் அறிமுகத்தினை தொடர்ந்து பெலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மாருதி எஸ்யுவி காரில் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன் மற்றும் எஸ் கிராசில் உள்ள பல வசதிகளை பெற்றிருக்கலாம். மேலும் XA-ஆல்ஃபா என்ற பெயரில் 2012 ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வந்த மாடலின் அடிப்படையில் உருவாக்க உள்ளனர்.

மேலும் வாசிக்க ; எஸ் க்ராஸ் முழுவிபரம்

YBA என்ற குறீயிட்டு பெயரில் இந்த காம்பேக் எஸ்யுவி தாயாராகி வருகின்றது. இந்த எஸ்யூவி காருக்கு போட்டியாக க்ரெட்டா , ஈக்கோஸ்போர்ட் வரவிருக்கும் TUV300 , வரவிருக்கும் ஹோண்டா BR-V டஸ்ட்டர் மற்றும் டெரோனோ போன்றவை விளங்கும்.

எஸ் க்ராஸ் காரை போன்றே YBA  காரும் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

Maruti Suzuki compact SUV confirmed

Exit mobile version