Site icon Automobile Tamilan

ஹூண்டாய் டீயூசான் எஸ்யூவி இந்தியா வருகை ?

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் வெற்றியை தொடர்ந்து ஹூண்டாய் டீயூசான் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக முழுதும் கட்டமைக்கப்பபட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஹூண்டாய் டீயூசான் வரவேற்பினை பொறுத்து வரும் காலத்தில் இந்தியாவிலே உற்பத்தி செய்ய வாய்ப்புகள்  உள்ளது. புதிய தலைமுறை டீயூசான் கார் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள நிலையில் க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ மாடல்களுக்கு இடையில் டியூஸான் நிலை நிறுத்தப்பட உள்ளது.

க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ கார்களை போன்றே ஃபூளூயிட் 2.0 வடிவ தாத்பரியங்களை கொண்டு உருவாகப்பட்டுள்ள ட்யூசான் காரில் அறுங்கோண வடிவ கிரிலுடன் , எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் பிரிமியம் வசதிகளுடன் விளங்குகின்றது.

சர்வதேச அளவில் 114 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.7 லிட்டர் மற்றும் 182 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ரூ.19.50 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் டீயூசான் காருக்கு போட்டியாக ஹோண்டா சிஆர் வி விளங்கும்.

Hyundai Tucson SUV to launch in India
Exit mobile version