190கிமீ வேகத்தில் சூப்பர் நானோ கார்

நானோ காரினை அனைவருக்கும் தெரியும் 1 லட்சத்தில் விற்பனைக்கு வந்த நானோ கார் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் முழுமையான வரவேற்பினை பெற தவறிவிட்டது.

கோவையை சேர்ந்த ஜேஏ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நானோ காரினை சூப்பர் நானோவாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்காக ரூ.25 லட்சத்தினை செலவிட்டுள்ளனர். மேலும் இந்த சூப்பர் நானோ ரேஸ் டிராக்கில் மட்டுமே இயக்க முடியும்.

nano

1.3 லிட்டர் என்ஜினை பொருத்தியுள்ளனர். இதன் உச்சகட்ட ஆற்றல் 230பிஎச்பி ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும்.  மேலும் வெளிப்புற தோற்றத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். குறிப்பாக முகப்பு விளக்கு, பின்புற மற்றும் முன்புற பம்பர்களை மாற்றியமைத்துள்ளனர்.

சூப்பர் நானோ காரினை ஆட்டோமொபைல் ஆர்வலர்களை கவனிக்க வைத்துள்ளது. ஆட்டோகார் பெர்ஃபார்மன்ஸ் ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

Exit mobile version