Site icon Automobile Tamilan

2016 ஆம் ஆண்டின் சிறந்த என்ஜின் – ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் 1.0L

5 வருடங்களாக தொடர்ச்சியாக சிறந்த என்ஜினுக்கான சர்வதேச என்ஜின் விருதினை ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் என்ஜின் வென்றுள்ளது. ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் என்ஜின் இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் பிரிவில் பங்கேற்ற 32 என்ஜின்களை வீழ்த்தி மீண்டும் 2016 ஆம் ஆண்டின் சிறந்த என்ஜினாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மிக சிறப்பான செயல்திறன் , ஆற்றல் , தரம் எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றில் முன்னனி வகிக்குகின்றது.

சர்வதேச என்ஜின் விருதுகள் 2016 ஆம் ஆண்டில் 31 நாடுகளை சேர்ந்த 65 ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் நடுவர்காளக செயல்பட்டு ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் என்ஜினை 2016 ஆம் ஆண்டின் சிறந்த என்ஜினாக தேர்வு செய்துள்ளனர். ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் என்ஜின் சர்வதேச அளவில் 72 நாடுகளில் ஈக்கோஸ்போர்ட் காரில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் ஃபோர்டு ஃபியஸ்டா காரிலும் இந்த என்ஜின் செயல்படுகின்றது.

100 PS, 125 PS , 140 PS, மற்றும் 180 PS என பலதரப்பட்ட ஆற்றல் வெளிப்பாடுகளை கொண்ட என்ஜினாக ஃபோர்டு நிறுவனத்தின் 11 மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவை ஃபியஸ்ட்டா , ஈக்கோஸ்போர்ட் , B-Max , C-Max , ஃபோக்ஸ் , கிரான்ட் C-Max , ட்ரான்சிஸ்ட் கூரியர் , மான்டியோ , டூரீனோ மற்றும்  டிரான்சிஸ்ட் கனெக்ட் ஆகும்.

ஈக்கோபூஸ்ட் வரிசையில் 1.5 லிட்டர், 1.6 லிட்டர், 2.0-லிட்டர் ,  2.3 லிட்டர் , 2.7 லிட்டர் மற்றும் 3.5 லிட்டர் வி6 என்ஜினும் உள்ளது.

Exit mobile version