இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் நிறுவனம் அடுத்த வருடம் முதல் ஹைபிரிட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மைல்ட் ஹைபிரிட் மற்றும் ஐயோனிக் போன்ற முழு ஹைபிரிட் கார்களும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சமீபத்தில் இந்தியா ஹூண்டாய் தலைமை செயல் அதிகாரி YK Koo அளித்துள்ள பேட்டியில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் சாஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனை நடுத்தர பிரிவு கார்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பூளூடிரைவ் என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனத்தால் அழைக்கபடும் மைல்ட் ஹைபிரிட் பெட்ரோல் ஹைபிரிட் அல்லது டீசல் ஹைபிரிட் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் சோனாடா ஹைபிரிட் கார் காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் ஐயோனிக் ஹைபிரிட் கார் மாடலும் அடுத்த சில வருடங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric vehicles – FAME) எனப்படும் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாருதி சுஸூகி காரில் SHVS மற்றும் மஹிந்திரா எஸ்யூவி காரில் இன்டெலி ஹைபிரிட் போன்ற மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா போன்ற கார்களில் ஹைபிரிட் சிஸ்டம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…