Automobile Tamilan

2017 ஹோண்டா ஆக்டிவா 4G ஸ்கூட்டர் வருகை விபரம்

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஆக்டிவா 4G ஸ்கூட்டர் அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஆக்டிவா 4G ஸ்கூட்டர்

வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப இன்ஜின்களை மாற்ற வேண்டியுள்ள நிலையில் அனைத்து ஆட்டோ தயாரிப்பாளர்கள் பிஎஸ் 4 விதிகளுக்கு என்ஜினை மாற்றி வருவதனை தொடர்ந்து சமீபத்தில் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் பிஎஸ் 4 எஞ்சின் வந்துள்ளதை தொடர்ந்து ஆக்டிவா 3G ஸ்கூட்டரிலும் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற 2017 ஹோண்டா ஆக்டிவா 4G ஸ்கூட்டர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிஎஸ் 4 விதிகளுடன் வரவுள்ள இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 109.2 cc  இன்ஜினில் 8 bhp பவருடன் 8.83 Nm டார்க் வெளிப்படுத்தும். V-matic கியர்பாக்சினை பெற்று விளங்கும். ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் தோற்ற அமைப்பு போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 4ஜி பேட்ஜை kட்oடுமே பெற்றிருக்கும் என தெரிகின்றது.

2017 ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விலை ரூ.500 முதல் 1000 த்திற்குள் அமையாலம் . தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலின் விலை ரூ. 50,290 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் படங்கள்

image source – motoroids 

 

Exit mobile version